டிஸ்கவரி நாளை பூமிக்கு திரும்புகிறது: பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்
கேப் கனவெரால்:
உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் டிஸ்கவரி விண்கலம் நாளை தரையிறங்குகிறது. அதில் வரும் வீரர்களை பத்திரமாக மீட்கஉச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைளை நாஸா எடுத்துள்ளது.
கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியதையடுத்து 2 ஆண்டுகள் கழித்து டிஸ்கவரி விண்கலத்தை அமெரிக்காஅனுப்பியது. 7 விண்வெளி வீரர்களுடன் கடந்த இரு வாரங்களுக்கு முன் அந்த விண்கலம் கிளம்பியது.ஆனால், டிஸ்கவரி விண்ணுக்குக் கிளம்பிச் சென்றபோது அதிலிருந்த வெப்பம் தாங்கும் தகடுகளில் ஒன்று சிதறி விழுந்தது.மேலும் இரு இடங்களில் தகடுகளுக்கு இடையே பொறுத்தப்பட்ட ரீ-இன்போர்ஸ்ட் கார்பன்-கார்பன் நூலிழைகள் துருத்திக்கொண்டு வெளியே வந்தன.
அவற்றை டிஸ்கவரியில் இருந்து விண்வெளி வீரர்கள் விண்ணில் நடந்து அகற்றினர். ஆனாலும் இந்த பிரச்சனைகளால்விண்கலம் தரையிறங்கும்போது அதற்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சப்பட்டது.
அகற்றப்பட்ட இந்த நூலிழைகளால் எந்த மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து நாஸா விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.
இந்த ஆராய்ச்சிகளின் முடிவில் விண்கலத்துக்கு பிரச்சனை ஏதும் ஏற்படாது என்ற முடிவுக்கு நாஸா விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.இதையடுத்து டிஸ்கவரி தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து டிஸ்கவரி பூமியை நோக்கி புறப்பட்டது. நாளை இது பூமியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுப் பாதையிலிருந்து புறப்பட்ட 32 நிமிடங்களில் புவியின் வளிமண்டலத்தை டிஸ்கவரி எட்டிவிடும். அதைத் தொடர்ந்துஅடுத்த 31 நிமிடங்களில் புளோரிடாவிலுள்ள கேப் கனவெராலில் தரையிறங்கும்.
டிஸ்கவரி விண்வெளி ஓடம் மணிக்கு 29,000 கி.மீ. வேகத்தில் பயணம் செய்யும். ஆனால் புவி வளிமண்டலத்தில் நுழையும்போது இந்த வேகத்தை கட்டாயமாகக் குறைக்க வேண்டும். அப்போது தான் பயணம் பாதுகாப்பானதாக அமையும்.
சாதாரண விமானங்களை விட வேகமாகவும், செங்குத்தாகவும் டிஸ்கவரி தரையிறங்கும். நிலத்தை தொடும் போது ஒருபாராசூட் விரிந்து அதன் வேகம் முற்றிலும் தடைபடும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications