வீரப்பன் விவகாரத்தில் உண்மையைக் கூற முடியாது: ஏ.டி.ஜி.பி. விஜயகுமார்
சேலம்:
வீரப்பன் கொல்லப்பட்ட விவகாரத்தில் எதையும் நாங்கள் மறைக்கவில்லை. தர்மத்தின் நெறிப்படி அதிரடிப்படை வீரர்கள்அவனை சுட்டுக் கொன்றனர் என்று சேலத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் ஏடிஜிபி விஜயகுமார் பேசினார்.
சட்டம் சார்ந்த மருத்துவ துறையில் நவீனப்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கம் சேலத்தில் நடந்தது. சேலம் அரசுமருத்துவமனை மருத்துவ கல்லூரி துணை கண்காணிப்பாளர் முத்துசாமி தலைமை வகித்தார்.மாநில சட்டம் சார்ந்த மருத்துவத் துறை நிபுணர் சங்க தலைவர் டாக்டர் வள்ளிநாயகம், சேலம் போலீஸ் கமிஷனர்ஆபாஷ்குமார், அதிரடிப்படை தலைவர் ஏடிஜிபி விஜயகுமார் மற்றும் பலர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
விஜயகுமார் பேசுகையில், சட்டம் சார்ந்த மருத்துவ பரிசோதனை மூலம் உண்மையை வெளி உலகுக்கு கொண்டு வர முடியும்.சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், சட்டம் சார்ந்த மருத்துவ துறையின் பங்களிப்பு அதிகம்.
இருட்டறையில் இருந்து கொண்டு, வீரப்பன் இறந்ததற்கான உண்மை காரணத்தை தடயவியல் பரிசோதனை மூலம்வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர். வீரப்பனை சுட்டுக் கொன்றதில் பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுகிறது.
மோரில் விஷம் வைத்து கொன்றதாகவும், தயிரில் விஷம் கலந்து கொன்றதாகவும் பல்வேறு தரப்பினர் பொய் பிரசாரம்செய்கின்றனர். அதிரடிப்படை வீரர்கள், தர்மத்தின் நெறிப்படி வீரப்பனை சுட்டுக் கொன்று திருப்திகரமாக பணியைமுடித்துள்ளனர்.
வீரப்பனை காட்டில் இருந்து எப்படி வெளி கொண்டு வந்தோம் என்பதை சிலவற்றை தான் கூற முடியும், சிலவற்றை கூறமுடியாது. வீரப்பனை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் என்னை பலர் புகழ்கின்றனர். ஆனால் வீரப்பனை கொன்ற சம்பவத்தில் நான்முன்னால் நின்றேன். என் பின்னால் நின்ற 95 சதவீத வீரர்களே இதற்கு காரணம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications