தேர்தல் களத்தில் குதித்தது காங்கிரஸ்: 540 இடங்களில் பொதுக் கூட்டம்
சென்னை:
சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராகும் விதத்தில் தமிழகம் முழுவதும் 540 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்துகிறது தமிழககாங்கிரஸ் கட்சி.
இந்தப் பொதுக் கூட்டங்கள் ஏற்கனவே நடக்கத் தொடங்கி விட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா காங்கிரஸ் கட்சி சார்பில்கொண்டாடப்பட்டது.இக் கூட்டத்தில் வாசன் பேசுகையில், 21வது நூற்றாண்டுக்கு இந்தியாவை அழைத்துச் சென்றவர் ராஜீவ் காந்திதான். இன்றைக்குகம்ப்யூட்டர், செல்போன்கள் என இந்தியா நவீனமயமாகியுள்ளதற்கு ராஜீவ் காந்திதான் முக்கியக் காரணம்.
நவீன இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்த ராஜீவ் காந்தி. இளைஞர்கள், மாணவர்களை அரசியலுக்கு இழுத்தவர். 18 வயதுமுடிவடைந்தவர்களுக்கு வாக்குஉலூமை பெற்றுத் தந்தவர். அப்படிப்பட்ட மகோன்னதமான தலைவர் துரதிர்ஷ்டவசமாக மதுமண்ணில் இறக்க நேரிட்டு விட்டது.
ராஜீவ் மறைவுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று கட்சியை வழி நடத்தி வருகிறார் அன்னைசோனியா காந்தி. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நேரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளையும்,பெருமைகளையும் மக்களிடம் கொண்டு செல்ல இருக்கிறோம். இதற்காக 540 இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும்.
ஏற்கனவே இந்தப் பொதுக் கூட்டங்கள் நடக்கத் தொடங்கி விட்டன. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணியும் இத்துடன் தொடங்கிவிட்டது என்றார் வாசன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications