நாங்களும் ஒரு நாள் ஆட்சியைப் பிடிப்போம்: திருமாவளவன்
ஜெயங்கொண்டம்:
விடுதலைச் சிறுத்கைள் அமைப்பு ஒரு நாள் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் ஏறும் என்று அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்கூறியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில், திருமண விழா ஒன்றில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசுகையில், சினிமா நடிகர்ஒருவர் அரசியல் கட்சி தொடங்கப் போகிறார். அவருக்கு என்ன தெரியும்.? சிம்ரன் இடுப்பை குலுக்கத் தெரியும், தொப்புளில் பம்பரம்விடத் தெரியும். சிறு புல் அளவுக்குக் கூட அவரது கட்சி இன்னும் வளரவில்லை. அதற்குள் அவரது மனைவி எனது கணவர் பிரதமராவார்என்று கூறுகிறார்.அந்த நடிகர் என்னதான் செய்தாலும், ஒற்றைக்காலில் நின்றாலும் அவரால் உச்சத்திற்கு வர முடியாது. சினிமா மோகம் மக்களைக் கெடுத்துக்குட்டிச் சுவராக்கி விட்டது. நாளை நடிகர் செந்திலும் கட்சி ஆரம்பிக்கலாம், அவரையும் மக்கள் பார்த்து ரசிக்கத்தானே செய்கிறார்கள்.
ஜெயலலிதாவும், கருணாநிதியும் தோற்றுப் போனால் சேரி வாழ் மக்கள் அழுகிறார்கள். அந்த நிலை மாற வேண்டும். திமுகவும், அதிமுகவும்தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை சுரண்டி அதில் குளிர் காய்நது கொண்டுள்ளனர். தாழ்த்தப்பட்டோருக்கு அரசியல் அதிகாரம்கொடுக்கக் கூடாது என்பதில் இரு கட்சிகளுமே ஒற்றுமையாக உள்ளன.
10 சதவீதம் ஓட்டுக்களுக்காகத்தான் திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கின்றன, தாழ்த்தப்பட்டோர், முஸ்லீம்களின் ஓட்டுக்களுக்காகபடாத பாடு பெறுகின்றன. ஆனால் ஆட்சி அமைத்த பின்னர் அவர்கைள மறந்து விடுகின்றனர்.
எங்களது இயக்கம் ஒரு நாள் ஆட்சிக் கட்டிலில் அமரும். ஏன் நாம் நாட்டை ஆளக் கூடாதா? ஓட்டுக்களை அள்ளிக் கொடுக்கும் குழுவாகநாம் இருந்தது போதும். இனிமேல் வெற்றி சக்தியாக மாறுவோம் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications