பூ ங்கா நகரமாகும் சென்னை!
சென்னை:
சென்னை என்றவுடன் கூவத்தின் மணம்தான் நினைவுக்கு வரும். ஆனால் அழகழகான பூக்கள் அடங்கிய பூங்காக்கள் நிறைந்தநகரம் என்ற நிலையை உருவாக்கும் வகையில் ஏராளமான பூங்காக்க்களை தமிழக அரசு சென்னையில் அமைத்துள்ளது.
சென்னை நகரை அழகுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. நடைபாதைகளை சீரமைப்பது,பாதாள சாக்கடைகளை ஒழுங்குபடுத்துவது, சாலைகள் மேம்பாடு, பூங்காக்கள் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் தமிழகஅரசு இறங்கியுள்ளது.முதல் கட்டமாக பூங்காக்களை புதிதாக உருவாக்கவும், பழைய பூங்காக்களை சீரமைக்கவும் பணிகள் தொடங்கின. இதன்படிசென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பின்றி, பாழடைந்து போய்க் கிடந்த பல பூங்காக்கள், ரவுண்டானா பூங்காக்கள்சீரமைக்கப்பட்டு அழகுற மறுபடியும் பூங்காக்களாக மாறியுள்ளன.
நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் எதிரே, கடற்கரை நேப்பியர் சாலை பூங்கா, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஓரமாக பூங்காக்கள் எனபல பூங்காக்கள் உருவெடுத்துள்ளன. இதுதவிர வள்ளுவர் கோட்டம், நேரு பூங்கா, தண்டையார்பேட்டை, புளியந்தோப்பு,மகாகவி பாரதி நகர், சர்மா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பூங்காக்கள் எழிலுற அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பூங்காக்களை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைக்கிறார். பின்னர் அவற்றை சுற்றிப் பார்க்கிறார். பூங்காக்களைதிறக்கவும், பார்வையிடவும் முதல்வர் ஜெயலலிதா நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவுள்ளதால், கிட்டத்தட்ட ஒரு நகர்வலம் போல மாறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications