படம் பார்க்க முடியாமல் போனதற்காக ஒரு தற்கொலை!
சென்னை:
சென்னை அருகே திரைப்படம் பார்க்க முடியாமல் போனதற்காக ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை தாம்பரம் அருகே உள்ளது ராஜ கீழ்ப்பாக்கம். இங்குள்ள சரோஜ் அவென்யூவில் வசித்து வருபவர் சுபாஷ். இவரதுமனைவி சாந்தி. இவர் வங்கியில் வேலை பார்த்து வந்தார். நன்கு படித்தவர். இந்த தம்பதிகளுக்கு பூஜா, தீக்ஷா என இருகுழந்தைகளும் உள்ளனர்.குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டருக்கு கணவனும், மனைவியும் சனிக்கிழமை இரவு படம் பார்க்கச் சென்றனர்.ஆனால் இவர்கள் சற்று தாமதமாக சென்றதால் திரையரங்கு நிரம்பி விட்டது, ஹவுஸ் ஃபுல் போர்டு போட்டு விட்டார்கள்.
இதனால் ஏமாற்றமடைந்த சாந்தி, கணவருடன் வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும், கணவன், மனைவி இடையே தகராறுவெடித்துள்ளது. தாமதமாக கூட்டிச் சென்றதால்தான் படம் பார்க்க முடியவில்லை என்று கூறி சாந்தி கணவருடன் வாக்குவாதம்செய்துள்ளார். இதனால் கோபமடைந்த சுபாஷ் வீட்டிலிருந்து வெளியேறி சிறிது நேரத்திற்குப் பிறகு வீட்டுக்கு வந்தார்.
வந்தபோது, சாந்தியைக் காணவில்லை. படுக்கை அறை உள்புறமாக தாளிடப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் கதவைதட்டிப் பார்த்தார். ஆனால் திறக்கவில்லை. ஜன்னல் பக்கமாக வந்து பார்த்தபோது சாந்தி தனது சேலையால் மின் விசிறியில் தூக்குமாட்டிக் கொண்டு தொங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக சேலையூர் போலீஸார் விரைந்து வந்து சாந்தியின் உடலை மீட்டனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதுதெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications