விவசாயிகளுக்கு ரூ. 645 கோடி கடன் வட்டி தள்ளுபடி: ஜெ.
சென்னை:
தமிழகத்தில் உள்ள 7 லட்சம் விவசாயிகள், செலுத்த வேண்டிய ரூ. 645 கோடி கடன் வட்டித் தொகையை தள்ளுபடி செய்து முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்; தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக நிலவிய கடும் வறட்சியால் ஒட்டுமொத்தவிவசாயத் துறையும் பாதிக்கப்பட்ட நேரத்தில், விவசாயிகளுக்குஉதவிக் கரம் நீட்டி அவர்களைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளைநான் எடுத்துள்ளேன்.2001ம் ஆண்டு எனது அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும் 30.6.2000 நிலவரப்படி நிலுவையாக இருந்த அனைத்துப் பயிர்க் கடன்கள் மீதானவட்டி, அபராத வட்டியைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டேன். இதற்காக ரூ. 310.51 கோடியை நான் அனுமதித்தேன்.
இதைத் தொடர்ந்து சிறு மற்றும் குறு விவசாயிகள் கூட்டுறவு நிறுவனங்களிலிருந்து பெற்ற பயிர்க் கடன் மீதான வட்டி ரூ. 61.05 கோடியை2002-03ம் ஆண்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டேன்.
இதுதவிர முந்தைய அரசால் செலுத்தப்படாமல் விடுபட்டிருந்த கூட்டுறவுக் கடன் நிறுவனங்களின் வட்டி ஊக்குவிப்புத் திட்டம் வகையிலானரூ. 34.24 கோடியையும் எனது அரசு ஈடு செய்தது.
தற்போது தமிழக அணைகள் நிரம்பி வழிகின்றன. பருவ மழையிலும் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. இந்த ஆண்டு விளைச்சல்அமோகமாக இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில், எதிர்காலத்திலும் தங்களைப் பாதுகாக்கக் கூடிய வகையில் கூடுதல் கடன் நிவாரணத் தொகுப்பு உதவி வழங்குவது குறித்துஎனது அரசு பரிசீலிக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர். எனவே அவர்களுக்குப் பொருளார்ந்த கடன் நிவாரண தொகுப்புதவியைவழங்க வேண்டியது அவசியம்.
இதைக் கருத்தில் கொண்டு கூட்டறவு நிறுவனங்களிடமிருந்து குறுகிய கால பயிர்க் கடன் பெற்றுள்ள தமிழக விவசாயிகளின் பயனுக்காகபுதிய விரிவான கடன் நிவாரணத் தொகுப்புதவி ஒன்றை அறிவிக்கிறேன்.
தொடர்ந்து நிலவிய வறட்சியை முன்னிட்டு, என்னுடைய அரசு கொண்டு வந்த 31.4.2004 அன்றைய நிலவரப்படியான கடன்தவணைகளை விவசாயிகள் 2 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டியதில்லை. அதன் பிறகு 31.3.2004 அன்றைய நிலவரப்படி நிலுவையாகஇருந்த அசல் மற்றும் வட்டி நிலுவைத் தொகையை 2006-07ம் ஆண்டில் இருந்து தொடங்கி 3 ஆண்டுத் தவணைகளில் செலுத்த வேண்டும்என்று வகை செய்கிற கடன் தவணைத் திருத்தியமைப்பு சலுகையைப் பெரும்பாலான விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
31.3.2004 அன்றைய நிலவரப்படியான திரண்ட வட்டி மட்டும் ரூ. 402 கோடி ஆகும். இந்த வட்டிச் சுமையில் இருந்து விவசாயிகளுக்குஒரே தடவையில் நிவாரணம் அளிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன். அதன்படி, 31.3.2004 அன்றைய நிலவரப்படியான திரண்டவட்டி ரூ. 402 கோடியைத் தள்ளுபடி செய்து ஆணையிட்டுள்ளேன். விவசாயிகளுக்கு பெரிய அளவிலானதொரு கடன் நிவாரணமாக இதுஅமையும்.
மேலும், 31.3.2004 அன்றைய நிலவரப்படி நிலுவையாக இருந்த அசல் தொகைக்கு 30.6.2006 வரை சேர்ந்து வரும் வட்டியையும்தள்ளுபடி செய்வது என முடிவு செய்துள்ளேன். இதனால் விவசாயிகள் ரூ. 243 கோடி அளவுக்கு கூடுதல் நிவாரணம் பெறுவார்கள்.இவ்வாறாக இந்தக் கடன் நிவாரணத் தொகுப்பு உதவியால் விவசாயிகளுக்க கிடைக்கும் மொத்த நிவாரணம் ரூ. 645 கோடி ஆகும். இதன்மூலம் 7.25 லட்சம் விவசாயிகள் பயன் அடைவர் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications