வரதட்சணை புகார்கள்: காவல்துறை விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை!
சென்னை:
வரதட்சணைக் கொடுமை தொடர்பான புகார்களை காவல்துறையினர் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ராமமூர்த்தி, அவரது மனைவி, மகன் ஆகியோர் மீது ராமமூர்த்தியின் மருமகள் வரலட்சுமி,திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது கணவர் குடும்பத்தார் தன்னை வரதட்சணை கேட்டுகொடுமைப்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.இந்த மனுவைப் பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
இந் நிலையில் ராமமூர்த்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், வரதட்சணைக்கொடுமை தொடர்பான புகார்களை விசாரிக்க காவல்துறைக்கு உரிமை இல்லை.
சமூக நலத்துறைதான் இத்தகைய வழக்குகளை விசாரிக்க முடியும். விசாரணையின் முடிவில், கடைசிக் கட்டமாக,தேவைப்பட்டால்தான் காவல்துறை இதில் தலையிட முடியும். எனவே எனது குடும்பத்தார் மீதான விசாரணைக்குத் தடை விதிக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, நீதிபதி குலசேகரன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், அதை விசாரணைக்கு ஏற்றனர். மேலும், வரதட்சணைக் கொடுமை தொடர்பான புகார்களைகாவல்துறையினர் விசாரிக்கவும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக உள்துறைச் செயலாளர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர், திருவல்லிக்கேணி காவல்நிலைய இன்ஸ்பெக்டர், சமூக நலத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications