திருமாவளவனை தூண்டி விடுகிறாரா தங்கர்பச்சான்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குஷ்பு விவகாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனை நான் தூண்டி விடவில்லை என்று இயக்குனர்தங்கர்பச்சான் கூறியுள்ளார்.

வெறும் பணத்துக்காக மட்டும் தான் நடிப்பேன் என்று எந்த நடிகையாவது கூறினால் அவர்களும் ஒரு வகையில்விபச்சாரிகள்தான் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தங்கர்பச்சான்.

அவரை நடிகர் சங்கத்திற்கு நேரில் வரவழைத்து கடுமையான வார்த்தைகளால் பொறிந்து தள்ளிய நடிக, நடிகையர் அவரைபத்திரிக்கையாளர்கள் முன், மன்னிப்பு கேட்க வைத்தனர். நடிகை மனோரமாவின் காலில் விழுந்து அவர் மன்னிப்பு கேட்டதால்பிரச்சினை ஒரு வழியாக ஓய்ந்தது.

அப்போது அவரிடம் ஆவேசமாக பேசியவர்கள் மூன்றே பேர்தான். அவர்கள் நடிகைகள் மனோரமா, குஷ்பு, விந்தியா மற்றும்நடிகர் வடிவேல். இவர்களில் குஷ்புதான் மிகவும் தாறுமாறாக தங்கரை ஏசினார்.

500 ரூபாய் சம்பளம் கூட கொடுக்க வக்கில்லாத நீயெல்லாம் எதற்காக படம் தயாரிக்க வந்து விட்டாய் என்று ஒருமையில்தங்கரை அழைத்து விமர்சித்தார் குஷ்பு என்று கூறப்படுகிறது.

அவரை மனோரமா, விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் அமைதிப்படுத்தினாலும், யார் மன்னித்தாலும் நாங்கள் தங்கரை மன்னிக்கமாட்டோம் என்று ஆவேசமாக கூறினார் குஷ்பு.

அதே குஷ்பு, இப்போது தங்கர்பச்சான் இருந்த அதே குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார். ஆனால் தங்கருக்குக் கிடைத்த தண்டனைகுஷ்புவுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான், குஷ்புவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களின் ஒரே குற்றச்சாட்டு.

தங்கர் பச்சான் விவகாரத்தில் குஷ்பு அப்படி நடந்து கொண்டதால்தான், இப்போது அவரால் ஏற்பட்டுள்ள பிரச்சினையில்விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு மிகத் தீவிரமாக இறங்கியுள்ளதாக திரையுலகினர் நினைக்கிறார்கள்.

இதுகுறித்து தங்கர்பச்சான் கூறுகையில்,

நமது சமுதாயத்தில் ஒரு ஆண் எப்படி வேண்டுமானாலும் வாழ முடியும். ஆனால் பெண்களால் இப்படித்தான் வாழ முடியும்என்பதைத்தான் எனது திரைப்படங்களில் நான் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். தமிழ்ப் பெண்களுக்கென கலாச்சாரம்,ஒழுக்க நெறியும் உண்டு.

அழகி, தென்றல், இப்போது வெளியாகியுள்ள சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என எனது படங்கள் அனைத்துமே தமிழர்கலாச்சாரத்தையும், தமிழ்ப் பெண்களின் ஒழுக்க நெறியையுமே சுட்டிக் காட்டியுள்ளன.

அப்படிப்பட்ட எனக்கே சமீபத்தில் அவமானம் நேர்ந்தது. ஆனால் அதை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் இப்போதுஒட்டுமொத்த தமிழர்களுக்கும் அதே அவமானம் நேர்ந்துள்ளது.திருமாவளவன் போன்றவர்கள் இதைத் தட்டிக் கேட்டுள்ளனர்.

இது ஆரோக்கியமானது, மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் நான் தூண்டி விட்டுத்தான் திருமாவளவன் தீவிரமாக இறங்கியுள்ளார்என்று கூறுவதை நான் ஏற்க மாட்டேன், அதில் உண்மையும் இல்லை.

உண்மையில் எனக்கும், திருமாவளவனுக்கும் இடையே சில விஷயங்களில் கருத்தொற்றுமை இருந்தாலும், பல விஷயங்களில்கருத்து வேறுபாடுகளும் உண்டு. எனவ்ே இந்தப் பிரச்சினைக்கும், எனக்கும், திருமாவளவனுக்கும் இடையே தொடர்பு எதுவும்இல்லை.

தமிழர்களின் உணர்வுகள்தான் இப்போது போராட்டத்தில் குதித்துள்ளன என்றார் தங்கர்பச்சான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+