நாகை-திருவாரூரில் மழைக்கு 4 பேர் பலி
வேதாரண்யம்:
மழை வெள்ளத்திற்கு நாகை-திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 2 மாணவர்கள் உள்பட 4 பேர் பலியாயினர். மேலும்மின்னல் தாக்கி 7 பெண்கள் படுகாயமடைந்தனர்.
தமிழகம் முழுவதும் பெய்து வரும் பலத்த மழையால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாகைமாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கள்ளிமேடு கிராமத்தில் நெல் வயலில் பெண்கள் களை எடுத்துக்கொண்டிருந்தனர்.அப்போது மின்னல் தாக்கியதில் செம்போடை கிராமத்தை சேர்ந்த பத்மா (வயது 51) அந்த இடத்திலேயேஉயிரிழந்தார்.
அவருடன் களை எடுத்துக் கொண்டிருந்த தேவி (வயது 35), விஜயலட்சுமி (வயது 55), கமலா (வயது 40)ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வேதாரண்யம் அருகேயுள்ள செட்டிபுலம் கிராமத்தில் வயலில் மாடுமேய்த்து கொண்டிருந்த சித்திரவேலு (வயது67) என்பவர் மின்னல் தாக்கி படுகாயமடைந்தார்.
அந்த பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த 7 பெண்களும் மின்னல் தாக்கி காயமடைந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கீழமஸ்தான் சாவடியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. அவரது மகன் சக்திவேல் (வயது 15)தீபாவளிக்காக நாகை மாவட்டம் அருந்தவம் புலம் கிராமத்தில் உள்ள தனது மாமா செல்வராஜ் வீட்டுக்குசென்றிருந்த போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவயிடத்திலேயேஇறந்தான்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள ஆவூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 12)தனது நண்பர்களுடன் சுள்ளன் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது ஆற்றில் மூழ்கி இறந்தான்.
இதே போல ஆற்றில் குளித்த 50 வயதுக்குட்பட்ட ஒருவரும் ஆற்றில் மூழ்கி இறந்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications