உமறு புலவருக்கு ரூ.25 லட்சத்தில் மணி மண்டபம்
சென்னை:
சீறாப் புராணம் உள்ளிட்ட பல இலக்கியப் படைப்புகளை படைத்த உமறுப் புலவருக்கு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் ரூ.25 லட்சம் செலவில் மணி மண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இரட்டை மலை சீனிவாசன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்,வெள்ளையத் தேவன், சுந்தரலிங்கனார், தேவநேயப் பாவாணர் ஆகியோருக்கு நினைவிடம் அமைக்க எனது அரசு ஏற்கனவேஉத்தரவிட்டுள்ளது.இந்த வரிசையில், அரேபியாவிலிருந்து தமிழகத்தில் குடியேறிய இஸ்லாமிய வம்சாவளியைச் சேர்ந்த, 1642ம் ஆண்டு பிறந்தஉமறுப் புலவருக்கு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
தனது 16வது வயதிலேயே எட்டயபுரம் அரசவைக் கவிஞராக மாறி சிறப்பு பெற்றவர் உமறுப் புலவர். சீறாப் புராணம், நொண்டிநாடகம், முத்துமொழி மாலை உள்ளிட்ட பல இலக்கியங்களைப் படைத்து தமிழுக்கு சிறப்பு சேர்த்தவர் உமறுப் புலவர்.
அவரது நினைவிடத்தை அரசே ஏற்றுக் கொண்டு அங்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டும் என தமிழ் ஆர்வலர்களும்,இஸ்லாமியப் பெருமக்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதை ஏற்று எட்டயபுரத்தில் உள்ள உமறுப் புலவர் நினைவிடத்தில் ரூ. 25 லட்சம் செலவில் சிறந்த முறையில் மணி மண்டபம்அமைத்திட உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications