சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம்: கருணாநிதி தகவல்
சென்னை:
சுய மரியாதைத் திருமணங்களுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாகதிமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக தொண்டரின் திருமணத்தை நடத்தி வைத்து கருணாநிதி பேசுகையில்,இது போன்ற சுய மரியாதைத் திருமணங்கள் இன்று சமூகத்தில் ஏராளமாக நடக்கின்றன. என் இல்லத்தில் இதுவரை நடந்த எந்தத்திருமண நிகழ்ச்சிக்கும் புரோகிதரை அழைத்ததில்லை.
இந்த தமிழ் முறை திருமணங்களுக்கு சொந்தக்காரர் பெரியார். அண்ணா முதல்வரானதும் இதற்கு சட்ட சம்மதம் கிடைத்தது.
இந்த வகையான திருமணம் இந்தியா முழுவுதம் நடக்க நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று டி.ஆர்.பாலுஇல்ல திருமணத்தில் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி முன்னிலையில் நான் கோரிக்கை வைத்தேன்.
அதை மத்திய அரசுக்கு தொடர்ந்து நினைவூட்டியும் வருகிறேன். எனது கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாகஎனக்கு தகவல்கள் வருகின்றன.
இந்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழகத்துக்கு வரவே வராது என்றுஎண்ணப்பட்ட பல திட்டங்கள் சோனியாவின் வழிகாட்டுததால் தமிழகத்குக்குக் கிடைத்தன.
தமிழ் செம்மொழிக்காக 150 ஆண்டுகள் குரல் கொடுத்தோம். வராது என்று விட்டுவிட்டோம். ஆனால், வந்துவிட்டதுசெம்மொழி.
சேது சமுத்திரத் திட்டம் வராது என்று மறந்திருந்தோம். ஆனால், அதுவும் வந்தது. இப்படி, வராது என்று எண்ணியவைகள்சோனியாவின் உதவியால் வந்தன.
அதே போல சுய மரியாதைத் திருமணங்கள் நாடு முழுவதும் நடக்கும் நிலை வரும் என்றார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications