இலங்கை பிரதமரானார் விக்கிரமநாயகே
கொழும்பு:
இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயகேவை அதிபர் ராஜபக்ஷே நியமித்துள்ளார். புலிகள்விஷயத்தில் மிகவும் கடுமையான நிலையைக் கொண்டவர் விக்கிரமநாயகே என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமராக இருந்த ராஜபக்சே அதிபரானதை பிரதமர் பதவிக்கு இலங்கை சுதந்திரா கட்சியில் பெரும் போட்டி எழுந்தது.சுதந்திரா கட்சியின் பொதுச் செயலாளரும், தொலை தொடர்புத்துறை அமைச்சருமான ஜெயரத்னே மற்றும் விக்கிரமநாயகேஇடையே போட்டி கடுமையாக இருந்தது.
இந் நிலையில் அதிபர் பதவியில் இருந்து விலகிய சந்திரிகா குமாரதுங்காவின் சகோதரரும் வெளியுறவுத்துறை அமைச்சருமானஅருணா பண்டாரநாயகேவும் பிரதமர் பதவியைப் பிடிக்க முயன்றார். ஆனால், அதை ராஜபக்ஷே தரப்பு ஏற்கவில்லை.
புலிகளுக்கு எதிரான கடும் நிலையைக் கொண்ட விக்கிரமநாயகேவை அவர் இன்று பிரதமராக நியமித்தார். அவருக்கு ராஜபக்ஷேபதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். இதற்கு முன் இருமுறை பிரதமராக இருந்தவர் விக்கிரமநாயகே என்பது குறிப்பிடத்தக்கது.பிற அமைச்சர்கள் இன்று அல்லது நாளை நியமிக்கப்படுகின்றனர்.
73 வயதான விக்கிரமநாயகே, புலிகளுடன் பேச்சுவார்த்தையை எதிர்த்தவர். தமிழர் பகுதிகளுக்கு அதிக அதிகாரங்கள் தருவதைஎதிர்த்து வருபவர். மேலும் புலிகளுடன் போர் நடத்த சிங்களர்கள் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்என்று பேசியவர்.
இப்போது இவரைப் பிரதமராக்கியிருப்பதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ராஜபக்ஷே மறைமுகமாக எச்சரிக்கைவிடுப்பதாகவே கருதப்படுகிறது.
27ம் தேதி பிரபாகரன் முக்கிய அறிவிப்பு:
இதற்கிடையே புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவின் அரசுடன் பேச்சு நடத்துவது குறித்து வரும் 27ம்தேதி தனது முடிவை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அறிவிப்பார் என்று தெரிகிறது.
புலிகளுடன் மீண்டும் பேச்சு நடத்தத் தயார் என அறிவித்துள்ள ராஜபக்ஷே, புலிகளை மிகக் கடுமையாக எதிர்க்கும்விக்கிரமசிங்கேவை பிரதமராக்கியுள்ளார்.
இந் நிலையில் வரும் 27ம் தேதி பிரபாகரன் மாவீரர் உரையாற்றவுள்ளார். அந்தக் கூட்டத்தில் தான் அமைதிப் பேச்சு குறித்த தனதுநிலையை அவர் விளக்குவார் என்று தெரிகிறது.
இந் நிலையில் இந்த அரசுடன் சமாதானப் பேச்சு நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை என புலிகள் அமைப்பு கூறியுள்ளது.
அமைதி முயற்சியைத் தொடங்கிய ரணிலைத் தோற்கடித்து ராஜபக்ஷேவை அதிபராகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் இலங்கையின்பெரும்பான்மை இன மக்களான சிங்களர்கள் தங்களது அடி மன ஓட்டத்தைத் தெளிவுபடுத்திவிட்டதாக புலிகள் கூறுகின்றனர்.
சிங்களர்களின் ஆதிக்க மனோபாவத்தையே இந்தத் தேர்தல் முடிவுகள் எதிரொலிப்பதாக புலிகள் கூறியுள்ளனர்.
இந்தத் தேர்தலில் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நேற்று அதிபராகப் பதவியேற்றுக் கொண்ட ராஜபக்ஷேவுக்கு ஜனாதிபதி கலாம், பிரதமர் மன்மோகன் சிங்ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications