கடலூரில் 50 உடல்கள் மீட்பு- 110 பேர் பலி?: பட்டினி, குடிக்க நீரில்லை
சென்னை:
தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக மழை விட்டுள்ளதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.கடலூரில் வெள்ளம் வடிய வடிய பிணங்களும், ஆடு மாடுகளின் உடல்களும் கிடைத்து வருகின்றன.
இதுவரை இம் மாவட்டத்தில் 50 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 110 பேரைக் காணவில்லை. இவர்களும்பலியாகிவிட்டதாகவே அஞ்சப்படுகிறது.

கடலூர், திருச்சி உள்ளிட்ட மிக அதிமாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் வெள்ள நீரைஅவர்கள் அருந்தி வருவதால் பல பகுதிகளில் தொற்று நோய்கள் பரவ ஆரம்பித்துள்ளன.
கடந்த ஒரு வாரமாக வாட்டியெடுத்த மழை குறைந்துவிட்டது. சில பகுதிகளில் மட்டுமே தூறல் விழுகிறது. பெரிய அளவில்மழையில்லை. இதனால் ஆறுகளில் வெள்ளம் குறைந்துள்ளது.
வெள்ளம் தேங்கிய பகுதிகளில் இருந்து நீர் வடியத் தொடங்கிவிட்டதால் பாதிப்பின் முழு வீச்சும் கண்ணுக்குத் தெரியஆரம்பித்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகளில் பொருட்கள் வீட்டில் வெள்ள நுழைந்ததால் நீரில் நாசமாகிவிட்டன.
பெரும்பாலான இடங்களில் சாலைகள், தரைப் பாலங்கள் முழு அளவில் சேதமடைந்துவிட்டன. சுமார் 280 உயிர்களைப்பறித்துவிட்ட இந்த கன மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதி மக்களுக்கும் இன்னும் முறையான நிவாரணம் போய்ச்சேரவில்லை.
பல பகுதிகளில் பட்டினியோடு நாட்களை நகர்த்தும் நிலையும் உள்ளது. குடிக்கும் நீரில் வெள்ள நீர் கலந்துவிட்டதால்,கிடைக்கும் நீரைப் பருக வேண்டிய நிலையில் உள்ளனர். மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புக்களும் இல்லாத நிலையிலும், வேலைக்குப் போக முடியாத நிலையிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரும்துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.
அதிகாரிகளால் சேதத்தின் அளவைக் கூட கணக்கிட முடியாத அளவுக்கு நிலைமை உள்ளது. வெள்ளம் இன்னும் சூழ்ந்துள்ளதால்அதிகாரிகளால் எல்லா பகுதிகளுக்கும் செல்ல முடியவில்லை.
கடலூரில் வெள்ளத்தால் சூழப்பட்டு கடந்த 4 நாட்களாக மரக் கிளைகள், வீட்டுக் கூரைகளில் தொங்கிக் கொண்டிருந்த பல கிராமமக்களை ராணுவத்தினர் படகுகளில் சென்று காப்பாற்றி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் சுமார் 300 கிராமங்கள் கடந்த மூன்று நாட்களாக நீரில் மூழ்கிக் கிடந்தன. இப்போது வெள்ளம் வடிய வடியபிணங்களும் ஆடு மாடுகளின் உடல்களும் கிடைக்க ஆரம்பித்துள்ளன. சில இடங்களில் உடல்கள் மிதக்கின்றன. முட் புதர்களில்சிக்கியும், இடிபாடுகளிலும் உடல்கள் கிடக்கின்றன.
இதுவரை 50 உடல்கள் வரை சிக்கியுள்ளன. இதனால் அந்தப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. இப் பகுதியில் பெரும் உயிர்ச்சேதம் நிகழ்ந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சிதம்பரம் பகுதியில் 110 பேர் காணாமல் போய்விட்டதாக காவல் நிலையங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. இவர்கள் வெள்ளத்தில்மூழ்கி அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
காட்டுமன்னாார்கோவில் உள்ளிட்ட பகுதிகள் தொடர்ந்து மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டே உள்ளன.கடலூரில் சுமார் 2 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications