மாஜி திமுக எம்பியின் ரூ. 75 கோடி மோசடி
டெல்லி:
டெல்லியைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிறுவனத்திடம் ரூ. 75 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் கரூர்எம்.பி. கே.சி.பழனிச்சாமிக்கு டெல்லி நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் டேட்டா அக்செஸ் இந்தியா என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்சித்தார்த் ராய் டெல்லி போலீஸில் சமீபத்தில் ஒரு புகார் கொடுத்தார்.அதில், சேரன் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்தின் புரமோட்டர் என்ற அடிப்படையில் என்னிடம் பழனிச்சாமி ஒப்பந்தம் ஒன்றைசெய்து கொண்டார்.
அதன்படி டேட்டா அக்செஸ் இந்தியா நிறுவனத்தில் பழனிச்சாமி ரூ. 75 கோடி முதலீடு செய்ய வேண்டும். ஆனால் பழனிச்சாமி அப்பணத்தை முதலீடு செய்யவில்லை.
அதேசமயம், ஒப்பந்தம் செய்தபடி டேட்டா அக்செஸ் நிறுவனத்தை அவரது சேரன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு மாற்றிவிட்டோம்.
இதைப் பயன்படுத்திக் கொண்டு நிறுவனத்தின் முக்கிய பங்குகளையும், எனக்குச் சொந்தமான 2 அசையாச் சொத்துக்களையும்பழனிச்சாமி தனது பெயருக்கு மாற்றிக் கொண்டாக். ஆனால், ரூ. 75 கோடியை முதலீடு செய்யாமல் மோசடி செய்து விட்டார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பழனிச்சாமி மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து டெல்லிகூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பழனிச்சாமி முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், பழனிச்சாமிக்கு முன் ஜாமீன் வழங்கியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications