போலி எப்ஐஆர்: உள்துறை செயலர், டிஜிபிக்கு நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போலி எப்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக உள்துறைச்செயலாளர், டிஜிபி, சிபிஐ இயக்குனர் மற்றும் சேலம் மாநகர காவல்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டது.

தமிழகத்தை உலுக்கி வரும் போலி எப்.ஐ.ஆர். விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரவி, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மோகன்ராஜ் ஆகியோர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் கற்பக விநாயகம், பாஷா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கு குறித்து 2 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கூறி உள்துறைச் செயலாளர், டிஜிபி, சிபிஐஇயக்குனர், சேலம் காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

அச்சக அதிபருக்கு ஜாமீன் மறுப்பு:

இந் நிலையில் போலி எப்ஐஆர்களை அச்சடித்து திருட்டு காக்கிகளுக்கு விற்ற சேலம் அச்சக அதிபர் சங்கரின் ஜாமீன் மனுவைநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

போலீசாருக்கு தேவையான எப்ஐஆர், ரோந்து புத்தகம் உள்பட அரசு ஆவணங்களை போலியாக அச்சடித்து வெளியிட்ட சேலம்அஸ்தம்பட்டி, இட்டேரி சாலையை சேர்ந்த அச்சக அதிபர் சங்கர் (வயது 38) போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இவரது அச்சகத்தில் 2 முறை போலீசார் சோதனை மேற்கொண்டு ஏராளமான ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டரை பறிமுதல்செய்தனர். கைதான சங்கர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரது சார்பில் ஜாமீன் மனு சேலம் குற்றவியல் 3வது நடுவர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மாஜிஸ்ரேட் சசிகலா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சங்கரை ஜாமீனில் விட போலீஸ் தரப்பில் எதிர்ப்புதெரிவிக்கப்பட்டது. சங்கரை வெளியே விட்டால் ஆவணங்களை அழிப்பதோடு சாட்சிகளை மிரட்டி பணிய வைக்கவும்வாய்ப்புள்ளதால் அவரை ஜாமீனில் விடுவிக்க கூடாது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் தரப்பில் கூறப்பட்ட வாதங்களை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் சசிகலா சங்கர் மீதான ஜாமீன் மனுவை தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார்.

சிபிஐ விசாரிக்க ராமதாஸ் கோரிக்கை:

இந் நிலையில் திண்டிவனத்தையடுத்த தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர்ராமதாஸ், போலி எப்.ஐ.ஆர். விவகாரத்தில் இதுவரை 2 அச்சக அதிபர்கள் சிக்கியுள்ளனர். உயர் காவல் அதிகாரிகளுக்கு இந்தசம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என செய்திகள் வருகின்றன.

எனவே போலி எப்.ஐ.ஆர் விவகாரத்தை தமிழக காவல்துறையினர் விசாரிப்பதை விட சிபிஐ வசம் இவ்வழக்கை ஒப்படைப்பதேசிறந்தது. அப்போதுதான் உண்மையான குற்றவாளிகள் பிடிபடுவர்.

உத்தரபிரதேசம், பீகார் போன்ற வட மாவட்டங்களில் நீதிமன்றங்களில் இந்தி ஆட்சி மொழியாக உள்ளது. எனவே அதுபோலவேதமிழக நீதிமன்றங்களிலும் தமிழில் வழக்குகளை நடத்த வேண்டும். இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்.

நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சனைகள் குறித்துப் பேச எம்.பிக்கள் லஞ்சம் வாங்கியது வெட்கக் கேடானது. இது தொடர்பாகஎடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மிகவும் சரியானதே என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+