சைபர் கிரைம்: சாதித்த சென்னை போலீஸ்
சென்னை:
மிரட்டல் இமெயில் எங்கிருந்து வந்தது என்பது தெரியாமல் டெல்லி போலீஸார் திணறிய நேரத்தில், அதை முதலில்கண்டுபிடித்து சாதனை படைத்தது சென்னை போலீஸார் என்று தற்போது தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இமெயில் தகவலால் நாடே கதிகலங்கிப் போனது. இந்த இ மெயில்எங்கிருந்து வந்தது என்பதை அறிய டெல்லி போலீஸார் உடனடியாக களத்தில் இறங்கினர்.மெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து அவர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அவர்களால் மெயில்எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதே நேரத்தில் சென்னை சைபர் கிரைம் பிரிவு உதவி ஆணையர் பாலு தலைமையில் சென்னை போலீஸார் களத்தில் குதித்தனர்.சைபர் கிரைம் தொடர்பான, குறிப்பாக இமெயில் மிரட்டல், எஸ்.எம்.எஸ். குற்றங்களை மிகவும் லாவகமாக கண்டுபிடிக்கும்திறமை படைத்தவர் உதவி ஆணையர் பாலு.
சம்பந்தப்பட்ட மெயில் எங்கிருந்து வந்தது என்ற ஆய்வில் இறங்கிய சில நிமிடங்களிலேயே அதை பாலு தலைமையிலான குழுகண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது. சென்னையிலிருந்து வந்ததாக முதலில் கூறப்பட்ட இமெயில், பாளையங்கோட்டைமற்றும் முருகன்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள இன்டர்நெட் மையங்களிலிருது சிபி இணையதளம் மூலம் அனுப்பப்பட்டதைபாலு கண்டுபிடித்து மாநகர ஆணையர் நடராஜிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக இந்தத் தகவலை வெளியிடாத நடராஜ், முதலில் மத்திய அரசுக்கு மட்டும் தகவல் தெரிவித்தார். இதையடுத்தேமத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, மெயில் சென்னையிலிருந்து வரவில்லை, நெல்லையிலிருந்து வந்துள்ளது தெரிய வந்தது.
சென்னை சைபர் கிரைம் போலீஸாரின் உதவியுடன் தற்போது டெல்லியிலிருந்து வந்துள்ள சிறப்புப் படை அதிகாரிகள்குற்றவாளிகள் என சந்தேகப்படுபவர்களிடம், சம்பந்தப்பட்ட இன்டர்நெட் மையங்களிலும் சோதனை மற்றும் விசாரணையில்ஈடுபட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications