For Daily Alerts
ராகுல் வருகை: விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
சென்னை:
புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் கடந்த மாதம் 28ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மகள் பிரியங்கா, மருமகன் மற்றும் குடும்பத்தினர், மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மாலத் தீவு சென்றனர்.
இந் நிலையில் ராகுல் இன்று டெல்லி திரும்புகிறார். திருவனந்தபுரத்தில் இருந்து இன்று மாலை 5.10 மணிக்கு சென்னை வரும்அவர், பின்னர் இங்கிருந்து டெல்லி புறப்படுகிறார்.
ராகுல் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
| ||||
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |