பாதுகாப்பில் கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கர்நாடக பாஜக எம்.எல்.ஏக்கள் சென்னையில் இரு நட்சத்திர ஹோட்டல்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் தேவே கெளடாவின் மகன் குமாரசாமியின்அதிரடி நடவடிக்கை காரணமாக பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

குமாரசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் மற்றும் பாஜக எம்.எல்.ஏக்கள் ரகசிய இடத்தில்வைக்கப்பட்டிருந்தன.

தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் திடீரென கெளடா பக்கம் தாவி விடக் கூடாது என்பதற்காக மதத்சார்பற்ற ஜனதாதளஎம்.எல்.ஏக்கள் 40 பேரையும் பெங்களூர் புற நகரில் ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்தார்.

அதே போல பாஜக எம்எல்ஏக்களை காங்கிரஸ் விலைபேசி இழுத்துவிடக் கூடாது என்பதற்காக அக் கட்சியைச் சேர்ந்த 70எம்.எல்.ஏக்கள் ஒரு நட்சத்திர ஹோட்டலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் 70 பேரும் நேற்றிரவு பெங்களூரிலிருந்து தனியார் சிறப்பு விமானம் மூலம் சென்னைஅழைத்து வரப்பட்டனர். இரவு 10.15 மணியளவில் அவர்கள் சென்னை வந்து சேர்ந்தனர். அவர்களை தமிழக பாஜக பொதுச்செயலாளர் குமாரவேலு வரவேற்றார்.

பின்னர் விமான நிலையத்திலிருந்து சொகுசுப் பேருந்துகளில் அனைவரும் தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ளஅக்கார்ட் மெட்ரோபாலிடன் என்ற நட்சத்திர ஹோட்டலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பாதிப்பேர் அங்கு தங்கிவிடமற்றவர்கள் இன்னொரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

மகாபலிபுரத்தில் ஜாலி டூர்

இந் நிலையில் இன்று அவர்கள் மகாபலிபுரத்தில் ஜாலி டூர் மேற்கொண்டனர். இந்த பாஜக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சொகுசுப்பேருந்துகளில் மகாபலிபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மகாபலிபுரத்தை சுற்றிப் பார்த்த அவர்கள் வேறு சிலஇடங்களுக்கும் செல்லவுள்ளனர்.

இதை முடித்துக் கொண்டு இன்று இரவு அனைவரும் சிறப்பு விமானத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் செல்கிறார்கள். அங்குசில நாட்கள் தங்கும் அவர்கள் 26ம் தேதி இரவுதான் பெங்களூர் திரும்புகிறார்கள். ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடப்பதால்இவர்களுக்கு அங்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும் என அக் கட்சி கருதுகிறது.

இந் நிலையில் குமாரசாமி ஆதரவு மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்களும் பாதுகாப்பாக கோவாவுக்கு அழைத்துச்செல்லப்பட்டுவிட்டனர். அங்கு ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக முதல்வர் தரம்சிங் வரும் 27ம் தேதி சட்டசபையில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என அம்மாநிலஆளுனர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே குமாரசாமியிடம் இருந்து எம்எல்ஏக்களை மீண்டும் தன் பக்கமாகக் கொண்டு வர தேவே கெளடா தீவிர முயற்சிஎதுவும் எடுக்கவில்லை. இதனால் கெளடாவும் அவரது மகனும் சேர்ந்து கொண்டு நாடகமாடுவதாகவே காங்கிரஸ் கருதுகிறது.

மொத்தத்தில் காங்கிரசால் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள முடியாது என்பது உறுதியாகிவிட்டது. இதனால் ஹைதராபாத்தில்இன்று தொடங்கும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கூட்டம் முடிந்தபின் வரும் 23ம் தேதியே தரம்சிங் ராஜினாமாசெய்துவிடுவார் என்று தெரிகிறது.

27ம் தேதி மெஜாரிட்டியை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்தி அதில் தோல்வியடைந்து அசிங்கப்பட காங்கிரஸ் தயாராக இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+