தேர்தலில் குதிக்கும் வாரிசுகள் !
சென்னை:
மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன், மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் ஆலடி அருணாவின் மகள், மூத்த காங்கிரஸ்தலைவர் குமரி ஆனந்தனின் மகள் ஆகியோர் வரும் சட்டமன்றத் தேர்தலில் குதிக்க தயாராகி வருகின்றனர்.
தமிழக அரசியலில் தலைவர்களின் வாரிசுகள் ஈடுபடுவது புதிதல்ல. கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலின், முரசொலி மாறனின்மகன் தயாநிதி மாறன், மூப்பனாரின் மகன் ஜி.கே. வாசன், டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி ஆகியோர் ஏற்கனவேஅரசியலில் குதித்து முக்கிய இடம் வகிக்கின்றனர்.இவர்கள் வரிசையில் மேலும் 3 வாரிசுகள் இடம் பிடிக்க உள்ளனர். குமரி அனந்தனின் மகள் டாக்டர் தமிழிசை செளந்திரராஜன்,மறைந்த ஆலடி அருணாவின் மகள் டாக்டர் பூங்கோதை, மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகிய 3பேரும் வரும் சட்டசபை தேர்தலில் குதிக்க உள்ளனர்.
தமிழிசை செளந்திரராஜன் ஒரு டாக்டர் ஆவார். இவர் தற்போது பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். சிறந்தமேடை பேச்சாளரான இவர் பாஜக சார்பில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. (அதிமுகவுடன் கூட்டணிஅமைந்து அவர்கள் அனுமதித்தால்..)
இதே போல் முன்னாள் திமுக அமைச்சரான ஆலடி அருணாவின் வாரிசு டாக்டர் பூங்கோதை, சென்னை திருவான்மியூரில்மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது தந்தை போட்டியிட்டு வென்ற நெல்லை மாவட்டம் ஆலங்குளம்தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
இவருக்கு அடுத்ததாக சிதம்பரத்தின் மகனான கார்த்திக் சிதம்பரம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடப் போவதாக பேச்சுநிலவுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications