பிரதமர் வீட்டு முன் வாலிபர் தீக்குளிக்க முயற்சி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பிரதமரின் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மிக பலத்த பாதுகாப்பு மிகுந்த டெல்லி ரேஸ் கோர்ஸ் பகுதிக்குள் கையில் பெட்ரோல் கேனுடன் நுழைந்த அந்த வாலிபர் பிரதமர்மன்மோகன் சிங்கின் வீட்டின் முன் உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டார்.பின்னர் தனக்குத் தானே தீ வைத்துக் கொள்ள முயன்ற அவரை பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து தடுத்தனர். உடனடியாகஅவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது பெயர் விவரம் உடனடியாகத் தெரியவில்லை. நாட்டிலேயே மிக அதிகபட்ச பாதுகாப்பு நிறைந்த பகுதிகளில் ஒன்றானரேஸ் கோர்ஸ் பகுதிக்குள் குடியரசு தின பாதுபாப்பையும் மீறி எண்ணெய் கேனுடன் வாலிபர் நுழைந்தது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
பிரதமரின் இல்ல பாதுகாப்பு குறைபாடுகளை இச் சம்பவம் வெளிக் கொண்டு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications