விஜயகாந்த் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சிக்கு மாநிலக் கட்சிக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி மதுரையில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில், தனது புதிய கட்சியை அறிவித்தார்விஜயகாந்த். கட்சி தொடங்கப்பட்ட பின்னர் மாநிலக் கட்சியாக அதை அங்கீகரிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் மனுசெய்யப்பட்டது.

இந்த மனுவை முதலில் பரிசீலித்த தேர்தல் ஆணையம், அங்கீகாரம் வழங்க மறுத்து விட்டது. கட்சியின் எல்லாமுடிவுகளையும் தலைவர் தான் எடுப்பார் என்று இடம் பெற்றிருந்த விதிமுறை ஜனநாயக ரீதியாக இல்லை.

எனவே விதிமுறையில் மாற்றம் செய்தால் மனு பரிசீலிக்கப்படும் என ஆணையம் அதற்குக் காரணம் கூறியது. இதையடுத்துகட்சி விதிமுறைகளில் திருத்தம் செய்த பின்னர் திரும்பவும் அங்கீகாரம் கோரி விண்ணப்பம் கொடுத்தனர்.

இந்த மனுவைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம், விஜயகாந்த் கட்சியை மாநிலக் கட்சியாக அங்கீகரித்துள்ளது. மாநிலக் கட்சியாகஅங்கீகாரம் கிடைத்துள்ளதால், தமிழகம் முழுவதும் தேசிய முற்போக்குத் திராவிட கழக வேட்பாளர்கள் ஒரே சின்னத்தின் கீழ்போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கட்சியின் சின்னமாக முழு நிலவு சின்னத்தைக் கோர விஜயகாந்த் முடிவு செய்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+