கேரள சட்டம்-உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முல்லைப் பெரியாறு அணை உயரம் தொடர்பாக கேரள அரசு கொண்டு வந்துள்ளஅவசரச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தமிழகஅரசு அறிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்துமாறுஉச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் புறம்பாக, அந்த உத்தரவை செயலிழக்கச் செய்யும்வகையில், கேரள சட்டசபையில் அவசரச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், சட்ட வல்லுநர்களின் கடும்கண்டனத்தை சந்தித்துள்ள கேரள அரசு, கேரள மக்கள் நலனைக் காக்கும்வகையிலேயே இந்த அவசரச் சட்டத்தை கொண்டு வந்ததாகக் கூறியுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தின் தென் மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் சோதனைஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் கேரள அரசின் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகமுடிவு செய்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அணையின்உயரத்தைக் குறைத்துக் காட்டும் முயற்சியாக, கேரள அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திருத்த மசோதாதவில் அணையின் உயரமாக 136 அடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட முன்வடிவின்படி, அதன் விவர அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளஅணைகளின் முழு நீர்த் தேக்க அளவை, 2003ம் ஆண்டு கேரள பாசன மற்றும் நீர்வளபாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு உள்ள அணை பாதுகாப்புக் குழுமத்தின்எழுத்து மூலமான ஆணையை பெற்ற பின்னரே உயர்த்த முடியும்.

கேரள அரசின் தற்போதைய நடவடிக்கை எல்லாம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைபயனற்றதாக்குவதற்குத்தான்.

தமிழக விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காகவும், முல்லைப் பெரியாறுஅணையின் நீர் மட்ட அளவை, தற்காலிகமாக குறைக்கப்பட்ட 136 அடியிலிருந்து142 அடியாக உயர்த்த அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் ஆணைசெயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காகவும்,

அணையை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைமேற்கொள்வதற்காகவும், கேரள பாசன மற்றும் நீர்வளப் பாதுகாப்புச் சட்டத்தில்செய்யப்பட்டுள்ள திருத்தத்தை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குதொடரும்.

இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+