திமுகவில் முஸ்லீம் லீக் அதிருப்தி: பாமக சுமூகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கோரிய தொகுதிகளைஒதுக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் அதன் தலைவர் காதர் மொஹைதீன்அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இடதுசாரிக் கட்சிகளுடன் சுமூகமாகப் பேசி தொகுதிகளை ஒதுக்கிவிட்டது திமுக.பாமக விஷயத்திலும் பேசிப் பேசி சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, தொகுதிகள்ஒதுக்கப்பட்டு வருகின்றன.

பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான குழுவினர் திமுக தலைவர்கருணாநிதியை பல சுற்று சந்தித்துப் பேசியதன் விளைவாக, பாமகவுக்கு 26தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன.

இன்னும் 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க வேண்டியுள்ளது. காங்கிரஸ் இனிமேல்தான் கருணாநிதியுடன் பேசவுள்ளது.

இந் நிலையில் முஸ்லீம் லீக் விஷயத்தில் பிரச்சனை உருவாகியுள்ளது. திமுககூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்கள் தரப்பட்டுள்ளன.அவை எந்தத் தொகுதிகள் என்பதை இறுதி செய்வதற்காக இறுதிச் சுற்றுப்பேச்சுவார்த்தை நடந்தது.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியே வந்த கட்சித் தலைவர் காதர் மொஹைதீன்அதிருப்தியுடன் காணப்பட்டார்.

பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இன்னும் தொகுதி உடன்பாடுஎட்டப்படவில்லை. நாங்கள் ராமநாதபுரம், அரவாக்குறிச்சி தொகுதிகளைக்கேட்டிருந்தோம். ஆனால் அத்தொகுதிகளை வேறு கட்சிகள் கேட்பதால் அவற்றை தரஇயலாது என்று திமுக தலைமை தெரிவித்துள்ளது.

அதற்குப் பதிலாக வாணியம்பாடி, திருவல்லிக்கேணி, நாகப்பட்டனம், புவனகிரி,திருச்சி1, பாளையங்கோட்டை, பாபநாசம் ஆகியவற்றில் 3 தொகுதிகளை செய்யுமாறுகேட்டுள்ளார்கள்.

அதில் 3 தொகுதிகளை தேர்வு செய்து தெரிவிப்போம். அதன் பின்னர் உடன்பாடுஎட்டப்படும் என்றார்.

முதலில் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம், அரவாக்குறிச்சி தொகுதிகள்ஒதுக்கப்பட்டன. இன்னும் ஒரு தொகுதி மட்டும்தான் பாக்கி என்று சில நாட்களுக்குமுன்பு காதர் மொஹைதீன் தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

ஆனால் அந்த இரண்டு தொகுதிகளும் தற்போது கிடையாது என்றுகூறப்பட்டிருப்பதால் முஸ்லீம் லீக் அதிருப்தி அடைந்துள்ளது.

இருப்பினும், திருவல்லிக்கேணி, வாணியம்பாடி ஆகியவை தங்களுக்கு சாதகமாகஇருக்கும் என அக் கட்சி நம்புகிறது. அதே போல பாபநாசத்தையும் காதர்மொய்தீன்தேர்வு செய்வார் என அக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில் காங்கிரசுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாகப் பேச அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி இன்று கருணாநிதியை சந்திப்பார்என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முன்று தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திலேயே முஸ்லீம் லீக் போட்டியிடவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+