பறவைக் காய்ச்சல்?: கோவையில் 2,500 கோழிகள் பலி!

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை மாவட்டத்தில் 14 கோழிப் பண்ணைகளில் 2,500 கோழிகள் அடுத்தடுத்துஇறந்துள்ளதால் அங்கு பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதோ என்ற பீதி ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கருமத்தம்மபட்டியை அடுத்துள்ளது தண்ணீர்ப்பந்தல் என்றகிராமம். இங்கு தனியாருக்குச் சொந்தமான 14 கோழிப் பண்ணைகள் உள்ளன.

இங்கு கடந்த 2 நாட்களில் மட்டும் ஏராளமான கோழிகள் அடுத்தடுத்து இறந்துள்ளன.ஆனால் கோழிகள் இறந்த தகவலை வெளியில் சொல்லாத அந்த கோழிப்பண்ணையாளர்கள், யாருக்கும் தெரியாமல் மண்ணுக்குள் புதைத்துள்ளனர்.

இதுகுறித்த தகவல் வெளியில் பரவி விடவே பொதுமக்கள் சுகாதாரத் துறைஅதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸாரும் விரைந்து சென்றுசம்பந்தப்பட்ட கோழிப் பண்ணைகளை பார்வையிட்டனர்.

அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் இதுவரை 2,500 கோழிகள் வரைஇறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கால்நடைத்துறை அதிகாரிகள், இறந்த கோழிகளின் ரத்த மாதிரியை எடுத்துசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் முடிவு வந்தால்தான் பரவியிருப்பதுபறவைக் காய்ச்சலா என்பது தெரிய வரும்.

இருப்பினும், போதிய தீவனம் கொடுக்கப்படாததால்தான் இந்தக் கோழிகள் இறந்துவிட்டதாக கோழிப் பண்ணையாளர்கள் தரப்பில் பரப்பப்படும் தகவல் கூறுகிறது.

வெளி மாநிலங்களிலிருந்து கோழித் தீவனத்தைக் கொண்டு வரும் கட்டுப்பாடுவிதிக்கப்பட்டுள்ளதால் தீவனத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதும் ஒரு புறம்உண்மையே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+