கொடையைக் கலக்கும் குறிஞ்சி மலர்கள்
Subscribe to Oneindia Tamil
கொடைக்கானல்:
12 ஆண்டுகளுக்குப் பிறகு கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சிமலர்களைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஏராளமான அளவில் குவிந்து வருகின்றனர்.
இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இப்போதே வரத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு றை பூக்கும் குறிஞ்சி மலர்கள் தற்போது பூத்துக்குலுங்க ஆரம்பித்துள்ளன.
கொடைக்கானல் மலையின் பல்வேறு பகுதிகளில் குறிஞ்சி மலர்கள் பூத்துக்குலுங்குவவைக் காணக் கண்கோடி வேண்டும்.
குறிஞ்சியாண்டவர் கோவிலைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான குறிஞ்சி மலர்கள்கூட்டம் கூட்டமாக காணப்படுகிறது. குறிஞ்சி பூத்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின்எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே மே மாதம் நடைபெறவுள்ள மலர்க் கண்காட்சியையொட்டி பிரையன்ட்பூங்கா மற்றும் அரசு தாவரவியல் பூங்கா ஆகியவை இப்போதே தயார்படுத்தப்பட்டுவருகின்றன.












Click it and Unblock the Notifications