பார்த்திபனிடம் பண மோசடி:கணவன்-மனைவி கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் பார்த்திபனிடம் ரூ. 44 லட்சம் பணத்தை மோசடி செய்த கணவன், மனைவியைபோலீஸார் கைது செய்தனர்.
நடிகர் பார்த்திபன் வீடு கட்டுவதற்காக வீரராகவன் என்பவரிடம் ரூ. 44 லட்சம்பணத்தைக் கொடுத்தார். வீரராகவன் ஒரு தனியார் கட்டட காண்டிராக்டர் ஆவார்.இவர் பார்த்திபன் படித்த பள்ளிக்கூட ஆசிரியர் என்பதால், தனது ஆசிரியர்தானேஎன்ற நம்பிக்கையில் மொத்தப் பணத்தையும் பார்த்திபன் கொடுத்துள்ளார்.
ஆனால் பணத்தை வாங்கிய வீரராகவன் சொன்னபஐ பார்த்திபனுக்கு வீடு கட்டிக்கொடுக்கவில்லை. பணத்தைத் திருப்பிக் கேட்டும் அவர் கொடுக்கவில்லை.
இதையடுத்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜிடம் பார்த்திபன் புகார்கொடுத்தார்.
இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த போலீஸார் வீரராகவன், அவரது மனைவிஜெயலட்சுமி ஆகியயோரிடம் விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தனர்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications