ஒயிட் காலர் கார்த்திக்: தொண்டர்கள் சுர்
சென்னை:
நடிகர் கார்த்திக் ஒரு அரசியல்வாதி போல செயல்படாமல், அலுவலக சிஇஓ போலநடந்து கொள்வதால் பார்வர்ட் பிளாக் தொண்டர்கள், அக்கட்சியின் வேட்பாளர்கள்படு கடுப்பாக உள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் மதுரையில் நடந்த மாபெரும் மாநாட்டின் மூலம்அரசியலுக்கு அடியெடுத்து வைத்தார் விஜயகாந்த். தேசிய முற்போக்கு திராவிடகழகம் என்ற கட்சியைத் தொடங்கிய விஜயகாந்த் இன்று திமுக மற்றும் அதிமுககூட்டணிகளை மிரட்டி வருகிறார்.திமுக, அதிமுகவுக்கு சற்றும் சளைக்காத வகையில் அவரது தேர்தல் பிரசாரம் படுசூடாகவும், மின்னல் வேகத்திலும் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட தமிழகத்தை ஒருசுற்று சுற்றி விட்டார் விஜயகாந்த்.
இதுவரை 27,000 கிலோமீட்டர் தொலைவுக்கு பயணம் செய்து மக்களை சந்தித்துள்ளவிஜயகாந்த் தனது 2வது கட்ட தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கியுள்ளார்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தொண்டை வலி, வயிற்றுப் போக்கு எனபல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதையும் கண்டு கொள்ளாமல் தமிழகமக்களை சந்திக்கும் தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து தீவிரமாக பிரசாரம்செய்து வருகிறார் விஜயகாந்த்.
ஆனால் விஜயகாந்துக்கு நேர்மாறாக இருக்கிறார் நடிகர் கார்த்திக். புதிய கட்சிதொடங்க வேண்டிய அவசியம் இல்லாமல், பண விரயத்திற்கு வழியில்லாமல்அப்படியே லட்டு போல அவரது கையில் வந்து விழுந்தது பார்வர்ட் பிளாக் கட்சி.
அப்படிக் கிடைத்த பார்வர்ட் பிளாக் கட்சியை சரியான திசையில் கார்த்திக் கொண்டுபோகாமல் தான்தோன்றித் தனமாக, சோம்பேறித்தனமாக வழி நடத்தி வருவதாகதொண்டர்கள் மத்தியில் புலம்பல்கள் கிளம்பியுள்ளன.
அவர்களது புலம்பல்களை நிரூபிக்கும் விதமாகத்தான் கார்த்திக்கின் போக்கும்உள்ளது.
வேட்பாளர் பட்டியலை படு நிதானமாக அறிவித்து வருகிறார் கார்த்திக். ஆண்டிப்பட்டிதொகுதியில் யார் வேட்பாளர் என்பதில் பெரும் குழப்பு குழப்பி வருகிறார். நான்போட்டியிட கட்சி ஆணையிட்டுள்ளது, ஆனால் முடிவு என் கையில் என்று கூறியகார்த்திக் 15ம் தேதி முதல் பிரசாரத்தைத் தொடங்குவேன் என்று அறிவித்திருந்தார்.
ஆனால் பிரசாரத்திற்கான எந்தவிதமான ஏற்பாடுகளும் இதுவரை நடப்பதாகதெரியவில்லை என்று கட்சியினரே கூறுகின்றனர். கார்த்திக் இப்போது சென்னையில்தனது வீட்டில் ஓய்வாக இருந்து வருகிறாராம்.
வீட்டை விட்டு வெளியே வராமல் ஏ.சி. ரூமிலேயே அவர் இருப்பதாக கூறுகிறார்கள்.ஏ.சி. அறையில் மட்டுமே அவரால் இருக்க முடிகிறதாம். ஏ.சி. இல்லாத அறையில்இருந்தால் விரைவில் சோர்ந்து போய் விடுகிறாராம்.
அதேபோல பத்திரிக்கையாளர் சந்திப்பின்போதும் கூட குளிர்கண்ணாடியைஅணிந்தபடிதான் இருக்கிறார் கார்த்திக். வெளிச்சம் அவரது கண்களை பாதித்துவிடுமாம். ஜீன்ஸ் பேன்ட், கூலிங் கிளாஸ், இடுப்பில் லெதர் பெளச் என படுஜாலியாக வலம் வந்து கொண்டிருக்கும் கார்த்திக் எப்போது டிப்பிக்கல்அரசியல்வாதியாக மாறப் போகிறாரோ என்று பார்வர்ட் பிளாக் கட்சியினர்டென்ஷனாக உள்ளனர்.
அத்தனை கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் படு தீவிரமாக இறங்கியுள்ள நிலையில்பார்வர்ட் பிளாக் மட்டும் இன்னும் சத்தமே காட்டாமல் உள்ளது. இத்தனைக்கும்கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் தேர்தலை சந்திக்க படு ஆர்வமாக உள்ளநிலையில், கட்சியின் தலைவர் வீட்டில் ஓய்வாக இருப்பது அவர்களை கவலைஅடைய வைத்துள்ளது.
கார்த்திக் பிரசாரம் செய்தால்தான் போட்டியிடும் தொகுதிகளில் 5,000வாக்குகளையாவது பெற முடியும், ஆனால் இப்படி கார்த்திக் மெளனமாக,நிதானமாக, மெத்தனமாக இருந்தால் நிலைமை என்னாகுமோ என்றுகவலைப்படுகிறார்கள் பார்வர்ட் பிளாக் கட்சியினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications