இலங்கை: ஜெனீவா அமைதிப் பேச்சு நடக்குமா?
மட்டக்களப்பு:
கிழக்குப் பகுதியில் இருந்து வன்னிக் காட்டுப் பகுதிக்கு புலிகளின் கமாண்டர்களை கடல் வழியாக அழைத்துவருவதில் இலங்கை கடற்படையால் ஏற்பட்டுள்ள ஆபத்தைத் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைகளில்இருந்து விலகிக் கொள்ளப் போவதாக விடுதலைப் புலிகள் அமைப்பு எச்சரித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஜெனீவாவில் வரும் 19ம் தேதி தொடங்க இருந்தன.ஆனால், வட கிழக்குப் பகுதிகளில் நடந்து வரும் வன்முறை, தமிழர்கள் கொல்லப்பட்டது ஆகிய விஷயங்கள்குறித்து அப் பகுதிகளின் கமாண்டர்களுடன் புலிகளின் தலைமை ஆலோசனை நடத்த வேண்டியிருப்பதால்பேச்சுவார்த்தையை சில நாட்கள் ஒத்தி வைக்க வேண்டும் நார்வேயிடம் எல்டிடிஈ கோரியது.
இந்தக் கோரிக்கையை நார்வே இலங்கை அரசிடம் விளக்கியது. இதையடுத்து அரசும் பேச்சுவார்த்தையை சிலநாட்கள் ஒத்தி வைக்க ஒப்புக் கொண்டது.
இதையடுத்து வரும் 24, 25 ஆகிய தேதிகளில் ஜெனீவாவில் பேச்சு நடக்கும் என நார்வே அறிவிக்கப்பட்டது.
ஆனால், புலிகளின் கிழக்குப் பகுதி கமாண்டர்களை கடல் வழியாக தங்கள் தலைமையகத்துக்கு அழைத்துவருவதில் கடற்படையால் சிக்கல் எழுந்துள்ளது.
ஆயுதங்கள் இல்லாமல் நார்வே குழுவினரின் மேற்பார்வையில் வந்த கமாண்டர்களின் படகுகளை கடற்படைக்கப்பல்கள் பின் தொடர்ந்து வந்தன. இதையடுத்து அந்தப் பயணத்தை புலிகளின் கமாண்டர்கள் ரத்துசெய்விட்டனர்.
அவர்களை புலிகளின் தலைமை சந்திக்காமல் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது சாத்தியமில்லை எனபுலிகளின் அமைதிச் செயலகத் தலைவர் பூலித் தேவன் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பு நடக்காவிட்டால்ஜெனீவா பேச்சுவார்த்தைகள் சாத்தியமில்லை என்றார்.
இதற்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசும், புலிகளும் ஆர்வம் காட்டவில்லை என்றும்,இதனால் நாட்டில் மீண்டும் வன்முறை வெடிக்கலாம் என்றும் நார்வே குற்றம் சாட்டியுள்ளது. இரு தரப்பினரும்இறங்கி வராவிட்டால் ஜெனீவா பேச்சுவார்த்தையால் எந்தப் பயனும் ஏற்படாது என நார்வே அமைதித் தூதர்ஹென்ரீசென் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications