இந்தியாவில் இருந்து கிளம்பிய உடன்.. சட்டென சரிந்த 3 விமானிகள்.. 30,000 அடி உயரத்தில் திடீர் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து லண்டனை நோக்கி சென்ற விமானத்தில் இருந்த 3 பைலட்களுக்குமே ஒரே நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதிலும் ஒருவருக்கு ஆக்சிஜன் தேவைப்படும் அளவுக்கு நிலைமை மோசமானது. சுமார் 30,000 அடி உயரத்தில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

நடுவானில் பல நூறு பேரின் உயிர் எப்போதும் விமானி கையில் தான் இருக்கும். இதனால் விமானியின் உடல்நலன் மற்றும் மனநலனை உறுதி செய்ய எல்லா விமான நிறுவனங்களுமே கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும். ஆனால், அதையும் தாண்டி சில மோசமான சம்பவங்கள் நடந்துவிடும். அப்படியொரு திக்திக் சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

Hyderabad London Flight Hyderabad Flight

திக்திக்

அதாவது ஹைதராபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இருந்த மூன்று விமானிகளுக்கும் நடுவானில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் ஹோட்டலில் அவர்கள் சாப்பிட்ட உணவு அல்லது குடிநீர் காரணமாக அவர்களுக்கு புட் பாய்சனிங் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது..

இந்தச் சம்பவத்தால் விமானத்தின் பாதுகாப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் மூன்று விமானிகளும் ஒரே நேரத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது!

ஹைதராபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட விமானத்தை இயக்குவதற்கு முன், மூன்று விமானிகளும் ஒரே ஹோட்டலில் தங்கியுள்ளனர். அவர்கள் ஹோட்டலிலேயே காலை உணவை சாப்பிட்டுள்ளனர். மேலும், பேக்கேஜ்டு குடிநீரையும் குடித்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் வழக்கம்போல் ஏர்போர்ட் வந்து தங்கள் பணிகளை கவனித்தனர். திட்டமிட்டபடி விமானம் ஹைதராபாத் ஏர்போர்ட்டில் இருந்து லண்டனை நோக்கி கிளம்பியது.

30,000 அடி உயரம்

இதுவரை எந்தவொரு சிக்கலும் இல்லை. ஆனால் விமானம் சுமார் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, மூன்று விமானிகளுக்கும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஒருவரின் நிலை மிகவும் மோசமடைந்தது. அவருக்கு விமானத்திலேயே அவசரமாக ஆக்ஸிஜன் வழங்கும் அளவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரால் விமானத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. மற்ற இரு விமானிகளும் உடல்நலக்குறைவுடன் இருந்தபோதிலும், விமானத்தை பாதுகாப்பாக லண்டனில் தரையிறக்கினர்.

விமானம் தரையிறங்கிய பிறகு ஆக்சிஜன் சிகிச்சை தேவைப்பட்ட விமானி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சுமார் 12 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மற்ற இரு விமானிகளின் உடல்நிலையும் மோசமடைந்ததாக கூறப்படுகிறது. மூவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருந்ததால், புட் பாய்சனிங் ஏற்பட்டிருக்கும் என்றே சந்தேகிக்கப்படுகிறது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ்

இது தொடர்பாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பயணிகளின் பாதுகாப்பில் எந்தவொரு சமரசமும் செய்யப்படவில்லை. விமானம் பாதுகாப்பாக லண்டன் வந்தடைந்தது. இருப்பினும், மூன்று விமானிகளும் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டது மிகவும் அரிதான சம்பவம் என்பதால், இது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகிறோம். என்ன நடந்தது என்பதை கண்டறிந்த பிறகு மீண்டும் இதுபோல நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பிரிட்டிஷ் ஏர்லைன் விமானிகள் சங்கம் இந்த சம்பவம் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் விமானிகள் தங்கும் அந்த ஹோட்டலின் சுகாதார தரம் குறித்து ஏற்கனவே பல முறை புகார்கள் எழுந்திருந்ததாகவும், இருப்பினும் அது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் விமர்சித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+