ஜெவுக்கு தோல்வி: உளவுத்துறை கணிப்பு- நக்கீரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த ஏப்ரல் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை தமிழக உளவுப் பிரிவினர் மாநிலம முழுவதும் மீண்டும் நடத்தியரகசிய சர்வேயில் திமுகவுக்கு 100 இடங்களும் அதிமுகவுக்கு 50 இடங்களும் கிடைக்கும் என்றுகூறப்பட்டுள்ளதாக நக்கீரன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்:

ஏப்ரல் 5ம் தேதியிலிருந்து 10ம் தேதி வரை மாநில உளவுத்துறை எடுத்த சர்வேயில் திமுகவுக்கு 100 இடங்களும்,அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரசுக்கு 33 இடங்களும், பாமகவுக்கு 24 இடங்களும், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 இடங்களும், முஸ்லீம் லீக் கட்சிக்கு 2இடங்களும் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.

திமுக கூட்டணிக்கு மொத்தம் 176 இடங்கள் கிடைக்கும்.

அதிமுகவுக்கு 50 தொகுதிகளிலும், மதிமுகவுக்கு 5 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 3 இடங்களிலும்வெற்றி கிடைக்கும். அதிமுக கூட்டணிக்கு மொத்தம் 58 இடங்களே கிடைக்கும்.

திமுக கூட்டணிக் கட்சியினரின் தீவிர பிரச்சாரம் காரணாக தேர்தல் நெருங்க நெருங்க அந்தக் கூட்டணிக்குஆதரவு அதிகரித்து வருவதாகவும் இதனால் அதிமுகவுக்கு கிடைக்கும் இடங்கள் 30 என குறையலாம்.

இவ்வாறு உளவுத்துறை அரசிடம் கொடுத்துள்ள ரிப்போர்டில் கூறப்பட்டுள்ளதாக நக்கீரன் தெரிவித்துள்ளது.

ராஜ்தீப் சர்தேசாய் தலைமையிலான சிஎன்என்- ஐபின் தொலைக்காட்சி, த ஹிந்து நாளிதழ் ஆகியவற்றுடன்இணைந்து சிஎஸ்டிஎஸ் என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில்

அதிமுக கூட்டணி 46 சதவீத வாக்குகளையும் திமுக கூட்டணி 44 சதவீத வாக்குகளையும் பெறக் கூடும் என்றுகூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துக் கணிப்பை நம்பாதீர்- ஜெ:

ஆனால், கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இன்று வேட்பு மனு தாக்கல் செய்த பின் தேனி மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதா நிருபர்களிடம்பேசுகையில்,

அதிமுக, திமுக கூட்டணிகளுக்கு இடையே மிகக் கடுமையான போட்டி நிலவுவதாக வந்துள்ள கருத்துக்கணிப்புகள் ஏற்கத்தக்கதல்ல. அவை தவறானவை ஆகும். பெரும்பாலா தொகுதிகளில் நாங்கள் தான்வெல்வோம்.

தமிழகத்தில் தொங்கு சட்டசபை எல்லாம் ஏற்படாது. தமிழக மக்கள் பெருவாரியான தீர்ப்புகளை அளிக்கக்கூடியவர்கள்.

கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதால் மட்டும் யாரும் பலம் பெற்றுவிட முடியாது. அதே போல பிரதமரோ,சோனியாவோ வந்து பிரச்சாரம் செய்தாலும் திமுக கூட்டணி வெல்லாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+