முசிறியிலும் ஜெயலலிதா போட்டி?
திருச்சி:
ஆண்டிப்பட்டி தவிர முசிறியிலும் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடவுள்ளதாககூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்செய்துள்ளார். இந் நிலையில் இன்னொரு தொகுதியிலும் அவர் போட்டியிடக் கூடும்என தகவல் பரவியுள்ளது.திருச்சி மாவட்டம் முசிறி தொகுதியில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது இது முதல் முறையல்ல. 1991ம்ஆண்டு பர்கூர் மற்றும் காங்கேயம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.
கடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் நான்கு தொகுதிகளில் அவர் வேட்பு மனு தாக்கல்செய்தார். ஆனால் டான்சி ஊழல் வழக்கில் சிக்கியதால் நான்கு மனுக்களும் தள்ளுபடிசெய்யப்பட்டன. பின்னர் நடந்த இடைத் தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டுவெற்றி பெற்றார்.
![]() |
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா நிச்சயம் வெல்வார் என்று அதிமுக தரப்பில்நம்பப்படும் நேரத்தில் அவர் இரண்டாவது தொகுதியில் போட்டியிடவுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சதி செய்த அரசியல் எதிரிகள்:
இதற்கிடையே ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட திருமலாபுரம்,அரப்படித்தேவன்பட்டி, எம்.சுப்புலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிரசாரம்செய்தார் ஜெயலலிதா.
அப்போது ஜெயலலிதா பேசுகையில், தர்மத்தை தடை செய்ய முடியும். ஆனால்தகர்த்து விட முடியாது. கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் நான்போட்டியிட முடியாமல் அரசியல் எதிரிகள் எனக்கு எதிராக தடை செய்து சதி செய்துவிட்டனர்.
ஆனால் தர்மத்தை தடை செய்யலாம், தகர்த்து விட முடியாது என்பது போலஅனைத்து தடைகளையும், சதிகளையும் தாண்டி நான் சாதனை படைத்துள்ளேன்.
நான் எங்கே இருந்தாலும் என் நினைவெல்லாம் உங்கள் மீதுதான். பறவை உயரஉயரப் பறந்தாலும், அதன் நினைவெல்லாம கூட்டுக்குள் இருக்கும் அதன் குஞ்சுகளின்மீதுதான் இருக்கும்.
அதுபோலத்தான் எனது நனைவும் எப்போதும் உங்கள் மீது இருக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டிப்பட்டி தொகுதி அபார வளர்ச்சி பெற்றுள்ளது.இந்தியாவிலேயே முன்மாதிரி தொகுதியாக ஆண்டிப்பட்டியை மாற்றியுள்ளேன்.ஆண்டிப்பட்டி என்றும் அரசிப்பட்டியாக தொடர, பொற்கால சரித்திரம் தொடரஎனக்கு வாக்களியுங்கள் என்றார் ஜெயலலிதா.
நான் யாரு??.. பாட்டிகளிடம் கலகல
ஆண்டிப்பட்டி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா, இரண்டு பாட்டிகளைப் பார்த்தவுடன் அவர்கள் பக்கத்தில் வேனை நிறுத்தி அன்புடன்நலம் விசாரித்து அசத்தினார்.
திருமலாபுரம் என்ற இடத்தில் இரண்டு பாட்டிகள் சாலையோரம் நின்றபடி ஜெயலலிதாவின் வேன் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இதையடுத்துவேனை அவர்கள் அருகே போய் நிறுத்தச் சொன்னார் ஜெயலலிதா.
கண்ணாடியை இறக்கிவிட்டவர், என்னை யார்னு தெரியுதா என்று கேட்டார்.. உடனே அந்த பாட்டிகள் என்னம்மா இப்படி கேட்டுப்புட்டீக.. எங்கஅம்மாவை எங்களுக்குத் தெரியாதா என்றனர்.
உடனே குஷியான ஜெயலலிதா, என்னை விட மூத்தவங்க.. என்னை அம்மான்றீங்களே என்று கேட்டார்.
நீங்க எங்களுக்கு மக மாதிரிம்மா என்று பாட்டிகள் சமாளித்து பதில் தந்தனர்.
இதையடுத்து எப்படி இருக்கீங்க.. ஒங்க பேரு என்ன என்று அன்புடன் விசாரித்த ஜெயலலிதாவை, நம்ம முதல்வர் ஜெயலலிதாவா இது என்று ஆச்சரியமாகப்பார்த்தனர் அப் பகுதியினர்.
சமீபத்தில் வயலுக்குள் இறங்கிச் சென்று பெண்களிடம் ஓட்டு கேட்டார் ஜெயலலிதா என்பது நினைவுகூறத்தக்கது.
அதே போல உசிலம்பட்டி பகுதியில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு திரும்பிய ஜெயலலிதாவை குஷிப்படுத்த அரசு வழங்கிய இலவச சைக்கிளோடுமாணவிகளை வரிசை கட்டி நிற்க வைத்து அசத்தினர் அப் பகுதி அதிமுகவினர்.
சைக்கிளுடன் நின்ற மாணவிகள் பக்கம் வேனை நிறுத்திய ஜெயலலிதா, சைக்கிள் நல்லா இருக்கா என்று கேட்கவே, லேசாக பயத்துடன் பயத்துடன்பேசிய அந்த மாணவிகள், ரொம்ப வசதியா இருக்கும்மா.. நன்றிம்மா என்றனர்.
சைக்கிளுடன் மாணவிகளை நிற்க வைத்து ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்ல வைத்த இப் பகுதி அதிமுகவினரின் டெக்னிகுக்கு நிர்வாகிகள் பாராட்டுதெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications