சட்டி, வாழைப்பழம், குட்டைப் பாவாடை, அடுப்பு, கத்திரி, கட்டில், ரம்பம்,..

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்படவுள்ள 71சின்னங்கள் எவை எவை என்று தெரிய வந்துள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்டகட்சிகளைத் தவிர மற்ற வேட்பாளர்களுக்கு சுயேச்சை சின்னங்கள்தான்ஒதுக்கப்படும். இதற்காக 71 சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த சின்னங்கள்குறித்த விவரம்:ே

வாழைப்பழம், நெக்லஸ், மணி, கரும்பலகை, வளையல், குவளை, பலூன், விமானம்,பீரோ, கிரிக்கெட் பேட், கிரிக்கெட் வீரர், டார்ச் லைட், ரொட்டி, சூட்கேஸ், பல்துலக்கும் பிரஷ், கேமரா, மெழுகுவர்த்தி, கேக், கேரட், அங்கி, வேன், தேங்காய், சீப்பு,கட்டில், காகித பட்டம், ஜாடி, பணப் பை, குட்டைப் பாவாடை, சட்டி, மோட்டார்,பல்லக்கு, கப் அன்ட் சாசர், அரிவாள், இஸ்திரி பெட்டி, ஐஸ்கிரீம், தொப்பி, தேனீர்குவளை, மின் கம்பம்;

கியாஸ் சிலிண்டர், ஹார்மோனியம், அடுப்பு, டம்பளர், பூட்டு, தபால் பெட்டி, முரசு,டை, குக்கர், மக்காச்சோளம், ரயில் என்ஜின், ரோடு ரோலர், மோதிரம், ரம்பம், கத்திரி,இறகுப் பந்து, தையல் எந்திரம், நாற்காலி, ஸ்பூன், சிலேட், மேசை விளக்கு, மிட்டாய்,வயலின், டிவி, கொட்டகை, ஊன்றுகோல், விசில், நூல்கண்டு, டேபிள் ஆகியவையேஇந்த சின்னங்கள்.

இந்த சின்னங்களிலிருந்துதான் விஜயகாந்த் உள்ளிட்ட சுயேச்சை வேட்பாளர்களுக்குசின்னம் ஒதுக்கப்படும்.

விருதாசலத்தில் போட்டியிடும் விஜயகாந்த்துக்கு ரம்பம் கிடைக்கப் போகிறதோஇல்லை வாழைப்பழம் கிடைக்கப் போகிறதோ.

ஸ்டாலின் தொகுதியில் 30 வேட்பாளர்கள்:

தமிழகத்திலேயே அதிக அளவாக திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின்போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதியில்தான் 30 வேட்பாளர்கள் களத்தில்உள்ளனர்.

சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வியாழக்கிழ மாலையுடன்முடிவடைந்தது. வெள்ளிக்கிழமை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. முறையாக இல்லாதநூற்றுக்கணக்கான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந் நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாசெய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 3,725 பேர் வேட்பு மனு தாக்கல்செய்தனர். ஆயிரம் விளக்கு தொகுதியில்அதிகபட்சமாக 30 பேர் மனு தாக்கல்செய்தனர்.

உளுந்தூர்பேட்டை, நன்னிலம், ஓரத்தநாடு ஆகிய தொகுதிகளில் குறைந்தபட்சமாகதலா 8 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.

கடந்த 2001ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் 2,829 வேட்பாளர்கள் மனு தாக்கல்செய்திருந்தனர். இந்த முறை அதை விட அதிகமான வேட்பாளர்கள் மனு தாக்கல்செய்துள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சின்னம் வழங்குவதில் முன்னுரிமைவழங்கப்படும். ஒரே சின்னத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கோரினால்குலுக்கல் முறை மூலம் சின்னம் ஒதுக்கப்படும்.

சுயேச்சை வேட்பாளர்களுக்காக 71 சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.வெள்ளிக்கிழமைக்குள் சின்னங்கள் முடிவு செய்யப்பட்டு விடும்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே சின்னம்கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை.

அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசார திரைப்படங்களைப் பார்த்து அனுமதிகொடுப்பதற்கு 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு திமுக மற்றும்ஜெயா டிவி ஆகியவை தயாரித்துள்ள தேர்தல் பிரசார படங்களைப் பார்த்துள்ளது.விரைவில் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும்.

வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள சொத்துக் கணக்கு விவரங்கள் பொதுமக்கள்பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதில் ஏதாவது ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டால்அதுவும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

வேட்பாளர்களின் பூத் ஏஜென்டாக நடப்பு எம்.எல்.ஏ.வோ, எம்.பியோ பணிபுரியஅனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார் நரேஷ் குப்தா.

விஜய்காந்த் தனது கட்சிக்கு முரசு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.அனைத்துத் தொகுதிகளிலும் தங்களுக்கு முரசு சின்னத்தை ஒதுக்குமாறு தே.மு.தி.க.வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.

முரசு இல்லாவிட்டால் மணி அல்லது மோதிர சின்னம், அல்லது விளக்கு சின்னத்தைஅவர்கள் கோரியுள்ளனர்.

ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்றே நரேஷ் குப்தாவின் பேச்சிலிருந்து தெரிகிறது.

இதனால் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு சின்னத்தில் போட்டியிட வேண்டியநிலைக்கு விஜய்காந்த் கட்சி தள்ளப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+