சசிகலா பற்றி வைகோ பேசுவாரா?: பாஜக

Subscribe to Oneindia Tamil

கோவை:

திமுகவில் வாரிசு அரசியல் பற்றிப் பேசும் வைகோ அதிமுகவில் நடக்கும் சசிகலா குடும்ப அரசியல் குறித்துப்பேசுவாரா என்று பாஜக அகில இந்தியத் துணைத் தலைவர் இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொண்டாமுத்தூரில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர்,

திமுக, அதிமுக என இரண்டு திராவிடக் கட்சிகளுமே கொள்கைளகளை மறந்துவிட்டு தேர்தலில் ஜெயிப்பதற்காகஇலவச வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன.

ஒரு கட்சி ரெண்டு ரூபாய்க்கு அரிசி என்கிறது. இன்னொரு கட்சி அரிசியே இலவசம் என்கிறது.

மொத்தத்தில் தமிழனை பிச்சைக்காரனாக்க முயற்சி நடக்கிறது.

வைகோ இத்தனை காலமும் கூடவே இருந்துவிட்டு ஒரே இரவில் வெளியே வந்து திமுகவைப் பற்றி உளறிவருகிறார். இத்தனை காலம் எதற்கய்யா அங்கே இருந்தீர். ஏன் இத்தனைக் காலம் திமுகவைத் தாக்கவில்லை.

திமுகவில் குடும்ப அரசியல் நடக்கிறது என்கிறார். அதிமுகவில் குடும்ப அரசியல் இல்லையா?. சசிகலா குடும்பஅரசியல் தானே அங்கே நடக்கிறது. அதைப் பற்றி வைகோவால் பேச முடியுமா? அந்த தைரியம் அவருக்குஉண்டா?

ஜெயலலிதா எதற்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். நாளை ஜெயலலிதாவையும் வைகோஇப்படித்தான் பேசுவார்.

வாரிசு அரசியல் என்ற ஒன்றே இல்லாத கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக மட்டும் தான் என்றார்கணேசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+