தமிழுக்கு தடை போட்ட பாஜக நடிகை !
சென்னை:
சென்னையில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது முழுக்கமுழுக்க இந்தியில் பேசியடிவி நடிகை ஸ்மிருதி இராணி, தனது பேச்சை தமிழில் மொழிபெயர்த்துக் கூறவேண்டாம் என்று தடை போட்டார்.
இதனால் அவர் என்ன பேசினார் என்பது புரியாமல் பொது மக்களும் பத்திரிக்கைநிருபர்கள் பெரும் குழப்பமடைந்தனர்.பிரபல டிவி நடிகை ஸ்மிருதி இராணி. இவர் நடித்துள்ள கியோன்கி சாஸ் பி கபிபாஹு தி என்ற டிவி தொடர் ரொம்பப் பிரபலம்.
இப்போது தினந்தோறும் அதிமுகவில் நடிகர், நடிகைகள் சேருவது மாதிரி போனமக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி நடிகர், நடிகைகளை வளைத்துவளைத்துப் பிடித்துப் போட்டது.
அப்படித்தான் இராணியும பாஜகவில் சேர்ந்தார். பின்னர் திடீரென விலகினார்.மீண்டும் திடீரென சேர்ந்தார்.
இந் நிலையில் அவரை இப்போது தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பாஜகவேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கூட்டி வந்து விட்டனர்.
![]() |
சென்னையில் வட இந்திய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி செளகார்பேட்டை. இங்குராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கிறார்கள்.
இங்கு ஸ்மிருதி இராணி பிராசரம் செய்தார். முழுக்க முழுக்க இந்தியில் தான் அவர்பேசினார்.
அவர் இந்தியில் பேசியது தவறில்லை தான். ஆனால், அவரது பேச்சைக் கேட்க வடஇந்தியர்கள் தவிர தமிழ்குடி மக்களும் கூடியிருந்தனர்.
இராணி இந்தியிலும், குஜராத்தியிலுமாக சும்மா பிச்சுப் போட்டு வாங்கினார். அவரதுபேச்சை தமிழில் மொழி பெயர்க்க முயன்ற உள்ளூர் பாஜக தலைவர்களை இராணிதடுத்துவிட்டார்.
தமிழில் மொழிபெயர்க்க வேண்டாம். நான் பேசுவது உங்களுக்கு இங்கேஇருப்பவர்களுக்கு நன்றாகப் புரியும் (நம்மாளுகளுக்கு இந்தியைப் புகுத்துறாராம்)என்று இந்தியிலேயே சொல்லிவிட்டு தமிழ் மொழிபெயர்ப்புக்கு தடை உத்தரவுபோட்டார்.
![]() |
இதையடுத்து இராணி பேசுவது புரிந்ததோ இல்லையோ அங்கு கூடிய வட நாட்டவர்அல்லாத பிற பொது ஜனங்கள், இவர் எந்த டிவியில வருவார் என தனியாகபட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தனர்.
ஆனால், இராணியின் உத்தரவால் அதிகம் பாதிக்கப்பட்டது பத்திரிக்கைநிருபர்கள்தான். இராணி என்ன பேசினார் என்பதே புரியாமல் கூட்டம் முடியும் வரைதேமே என்று நின்று விட்டு அங்கிருந்து கிளம்பினர்.
கிளம்பும்போது தங்களை இந்தக் கூட்டத்தை கவர் செய்ய அழைத்த பாஜகநிர்வாகிகளை ஒரு பிடி பிடித்துவிட்டுச் சென்றனர்.
நாங்க டிரான்ஸ்லேட் பண்ணி உங்க ஆபிசுக்கு அனுப்புறோம் என பாஜகவினர் தாஜாசெய்ய, அந்த தமிழ் டிரான்ஸ்லேசனை பத்திரமா இராணிகிட்டேயே குடுத்துருங்கஎன்று கூறிவிட்டனர் சில நிருபர்கள்.
இதேபோல அண்ணா நகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் டாக்டர்ஹண்டேவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் பாஜக அகில இந்திய செயலாளர்பண்டாரு தத்தாத்தேராயா.
இவர் என்ன செய்தார் தெரியுமா? தெலுங்கிலேயே பேசி ஓட்டு சேகரித்தார். அதைஹண்டே மொழி பெயர்த்து வாக்காளர்களுக்கு தமிழில் பேசினார்.
இதில் இன்னொரு விஷேசம் இருக்கு.. ஹண்டேயின் தாய்மொழி கன்னடம்.














Click it and Unblock the Notifications