தமிழகத்தில் 4 நாட்களுக்கு தண்ணி கிடையாது!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபைத் தேர்தலையொட்டி மே 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை மதுபானக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மே 8ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தொடர்பான செய்திகள்பும், பின்பும் தமிழகம்முழுவதும் உச்சகட்ட பரபரப்பு நிலவும் என்பதால் விரும்பத்தகாத சம்பவங்களைதவிர்ப்பதற்காக மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் இதுதொடர்பான உத்தரவைப்பிறப்பித்துள்ளனர்.

அதன்படி மே 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.இதேபோல வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 11ம் தேதியும் மதுபானக்கடைகளுக்கு விடுமுறை ஆகும்.

கடைகள் மட்டுமல்லாது பார்களும் மூடப்படுகின்றன.

இதற்கிடையே தேர்தலில் கடும் போட்டி நிலவுவதால் அசம்பாவித சம்பவங்கள்நடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அதைத் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளும் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

போலீசார் தவிர ராணுவமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

மேலும் வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுடவும் தேர்தல் ஆணையம்உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதால் முன்பே வாங்கி ஸ்டாக் வைக்கும் வேலைகளில் கரைவேட்டிகள் இறங்கவுள்ளன. இதனால் அடுத்த சில நாட்களில் டாஸ்மாக் விற்பனை பல மடங்காகும் என்றுதெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+