எம்ஜிஆர் சமாதியில் லீலாவதி திடீர் உண்ணாவிரதம்
சென்னை:
ஆண்டிப்பட்டியில் வேட்பு செய்யச் சென்றபோது வேனில் கடத்திச் சென்று மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்தஅதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எம்ஜிஆரின் அண்ணன் மகள் லீலாவதி இன்று திடீரெனஎம்ஜிஆர் சமாதி முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
![]() |
எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியின் மகள் லீலாவதி எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம்தானம் செய்தவர்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகப் போட்டியிடவேட்பு மனு தாக்கல் செய்ய இருந்த நிலையில் இவரை ஒரு கும்பல் வேனில்கடத்தியது.
வேனிலேயே வைத்து அடித்து, உதைத்துவிட்டு விடுவித்தது.
இது தொடர்பாக சூளைமேடு போலீஸ் ஸ்டேசனில் இவர் கொடுத்த புகாரை போலீசார்ஒழுங்காக பதிவு செய்யவில்லை. எப்ஐஆர் காப்பி தரவும் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து ஜனாதிபதி கலாம், தேர்தல் ஆணையம், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்குலீலாவதி புகார் மனுக்கள் அனுப்பினார்.
மேலும் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவை சந்தித்து, தன்னை வேட்பு மனு தாக்கல்செய்யவிடாமல் ஒரு கும்பல் கடத்திச் சென்றதால் ஆண்டிப்பட்டி தேர்தலுக்கே தடை விதிக்க வேண்டும் என்றுகோரினார்.
இதையடுத்து இந்த புகார் குறித்து விசாரணை நடத்த தமிழக டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந் நிலையில் இன்று காலை லீலாவதி திடீரென சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதிக்குவந்தார். அங்கு தனது திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
தகவலறிந்த போலீசார் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தனர். அனுமதியின்றி உண்ணாவிரதம் நடத்தக் கூடாது..மரியாதையாக எழுந்து போய்விடுங்கள் என்றனர்.என்னைக் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் உண்ணாவிரதத்தை கைவிடுவேன் என லீலாவதிகூறினார். இதையடுத்து உங்களை கைது செய்வோம் என போலீசார் மிரட்டினர்.
இதைத் தொடர்ந்து தனது போராட்டத்தை லீலாவதி வாபஸ் பெற்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய லீலாவதி, நான் ஆண்டிப்பட்டிக்குச் சென்று ஜெயலலிதாவுக்கு எதிராக பிரச்சாரம்செய்வேன். ஜெயலலிதா ஆட்சியில் எல்லாம் எம்ஜிஆரின் உறவினர்களாகிய நாங்கள் பல வகைகளிலும்கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறோம் என்றார்.













Click it and Unblock the Notifications