வாக்கு கேட்டு 75,000 தபால் கார்டுகள்!
சேலம்:
வீரபாண்டி தொகுதி திமுக வேட்பாளர் ராஜாவை ஆதரித்து தபால் கார்டுகள் மூலம்வாக்கு சேகரித்து வருகிறார் அந்தக் கட்சியைச் சேர்ந்த ஈசான் இளங்கோ என்றதொண்டர்.
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் தான் இந்த ராஜா. வழக்கமாகஇத்தொகுதியில் ஆறுமுகம்தான் போட்டியிடுவார். இம்முறை அவர் சேலம்தொகுதிக்கு மாறி விட்டார். வீரபாண்டியில் தனது மகனை நிறுத்திவிட்டார்.ராஜவுக்காக ஈசான் இளங்கோ என்ற தொண்டர் செய்து வரும் பிரசாரம் தொகுதியைக்கலக்கி வருகிறது. மொத்தம் 2.6 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட வீரபாண்டிதொகுதியில் கிட்டத்தட்ட 75,000 வாக்காளர்களுக்கு தபால் கார்டு அனுப்பி வாக்குசேகரித்து வருகிறார் இளங்கோ.
இவரது பிரசாரம் ரொம்ப சிம்பிள்: 25 பைசா தபால் கார்டில் வாக்காளர்களே உங்களதுபொன்னான ஓட்டை திமுக வேட்பாளர் வீரபாண்டி ராஜாவுக்கு உதயசூரியன்சின்னத்தில் செலுத்துங்கள் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த கார்டுகளை வாக்காளர்களின் முகவரிக்கு போஸ்ட் செய்து வருகிறார் இளங்கோ.
முதலில் அனைத்து வாக்காளர்களுக்கும் கார்டு அனுப்ப திட்டமிட்டிருந்தார்இளங்கோ. ஆனால் அது மிகப் பெரிய வேலை என்பதால் 75,000 பேருக்கு மட்டும்தற்போது அனுப்பி வருகிறார்.












Click it and Unblock the Notifications