ஆபரேட்டர்களை மிரட்டும் எஸ்சிவி-வைகோ

Subscribe to Oneindia Tamil

சிங்காநல்லூர்:

அதிமுக தேர்தல் பிரச்சார செய்திகளை சரியாக ஒளிபரப்பக் கூடாது என்று கேபிள் டிவி ஆபரேட்டர்களைசுமங்கலி கேபிள் விஷன் மிரட்டி வருகிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

சிங்காநல்லூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வைகோ கூறுகையில்,

எனக்கு இன்று காலை நம்பத் தகுந்த இடத்தில் இருந்து ஒரு தகவல் கிடைத்தது. அது 80 லட்சம் கேபிள் டிவிஇணைப்புகளைக் கொண்ட சுமங்கலி கேபிள் விஷன் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் உள்ள கேபிள் டிவிஆபரேட்டர்களை மிரட்டுகிறது என்பது தான்.

ஜெயா மற்றும் விண் டிவியில் அதிமுக தேர்தல் பிரச்சாரங்கள் ஒளிபரப்பாகும் சமயங்களில் கேபிள் டிவிஆபரேட்டர்கள் சரியான ஒளிபரப்பு செய்யாமல், உருவங்களை சிதைத்தும், ஒலியை குளறுபடி செய்தும்ஒளிபரப்ப வேண்டும் என்று மிரப்படுகிறார்கள்.

பணியாவிட்டால் அந்தப் பகுதியில் கேபிள் டிவி இணைப்பே துண்டிக்கப்படுகிறது. இதன்மூலம் நாட்டில் கருத்துச்சுதந்திரம் பறிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதையெல்லாம் தேர்தல் கமிஷன் பார்த்துக் கொண்டுநடவடிக்கை எடுக்காமல் உள்ளது.

ஹிட்லர் படையெடுத்துப் போகும் முன் தன் வீரர்களிடம், முதலில் ரேடியோ நிலையங்களைக் கைப்பற்றுங்கள்என்று தான் சொல்லி அனுப்பினான்.

தகவல் தொடர்பையும் செய்தி ஊடகத்தையும் கைப்பற்றிவிட்டால் மக்களை திசை திருப்பிவிடலாம் என்று அவன்கணக்கு போட்டான். அதையே தான் இப்போது திமுகவும் செய்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

இதைத் தடுக்கத்தான் தமிழக முதல்வர் சட்டசபையில் கேபிள் இணைப்பை அரசுடமையாக்கும் மசோதாவைக்கொண்டு வந்தார். அதை கம்யூனிஸ்டுகள் எதிர்க்கிறார்கள்.

நான் மார்க்சிஸ்டுகளை நோக்கிக் கேட்கிறேன், ஏ... காம்ரேடுகளே ஏகபோகத்தைத் தடுப்பதற்காக பிறவிஎடுத்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்களே. இந்த ஏகபோகத்தை ஏன் எதிர்க்கவில்லை.

கேரள மாநில நல்வாழ்வுக்கு குரல் கொடுக்கும் அச்சுதானந்தன் போல தமிழக மக்கள் நலனில் சங்கரய்யாபோன்றவர்கள் அக்கரை காட்டுவதில்லை.

டாடாவை மிரட்டிய மந்திரி அது உண்மையல்ல என்கிறார். எனக்குக் கிடைத்த நம்பகமான தகவலின்அடிப்படையில் தான் நான் பேசினேன். உண்மை கண்டறியும் சோதனைக்கு நான் தயார்? அவரது அண்ணனும்தயாரா?

கோர்ட்டில் கேஸ் போடுகிறார்களாம் கேஸ்.. நான்கு நாளில் அதை வாபஸ் வாங்கிக் கொண்டு ஓடப்போகிறார்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+