ப.சிதம்பரத்தின் வாய்ச் சவடால்: ஜெ. கண்டனம்
சென்னை:
சுனாமி நிதி தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வாய்ச் சவடாலாக பேசிவருகிறார் என்று முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தில் சுனாமி பாதித்தபோது,ஓடோடிச் சென்று அவர்களுக்கு உதவியது அதிமுக அரசுதான் என்பது மக்களுக்குநன்றாகத் தெரியும்.உலக வங்கி, ஆசிய வளர்ச்சி ஆகியவற்றிடமிருந்து கடனுதவி பெற்று தமிழக அரசுஉதவியை வழங்கியது. தமிழ்நாட்டில் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு அறிவித்தஆயிரம் கோடி ரூபாய் ப.சிதம்பரத்தின் மேற்பார்வையின் கீழ் 808 கோடியாககுறைக்கப்பட்டது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவானஉண்மையாகும்.
தமிழகத்திற்கு சுனாமி நிவாரண நிதியாக ரூ. 5,025.56 கோடி வழங்கி இருப்பதாகசிதம்பரம் சொன்னதையே திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளை போல கூறி வருகிறார்.அவர் சொல்வது முற்றிலும் தவறாகும்.
இந்தத் தொகையில் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் சர்வதேச வேளாண்வளர்ச்சி நிதியம் ஆகியவற்றிடமிருந்து பெறப்பட்ட கடன் தொகை ரூ. 2,678.37கோடி ஆகும். இந்தக் கடனை மாநில அரசு திரும்பத் தர வேண்டும்.
ஆனால் இந்தக் கடன் தொகையை மாநில அரசு திரும்பித் தராவிட்டாலும், மத்தியஅரசு அதனை வழங்கும் என்று இப்போது சிதம்பரம் கூறுகிறார்.
இப்போது அவர் குழம்பிப் போய் இருக்கிறார். வெள்ள நவாரணமாக தமிழகத்திற்குரூ. 13,685 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதில் ஆயிரம்கோடி மட்டுமே அறிவிக்கப்பட்டது.
அதுவும் இப்போது ரூ. 808.35 கோடியாக குறைக்கப்பட்டது. இதற்கு சிதம்பரம்சொல்லும் பதில் என்ன? தமிழக அரசின் இதர கோரிக்கைகள் குறித்து ஒரு குழு ஆய்வுசெய்து முடிவெடுக்கும் என்று அவர் சொல்லி இருப்பதன் மூலம் ஓடி ஒளிகிறார்என்பது தெளிவாகிறது.
தமிழக அரசின் நிவாரணப் பணிகளை மக்கள் வெகுவாகப் பாராட்டுகிறார்கள்.ஆனால் இப்போது தமிழகத்தைச் சேர்ந்த 13 மத்திய அமைச்சர்களும் இதில் ஆதாயம்தேட முயற்சிக்கிறார்கள்.
ப.சிதம்பரம் வெற்றுச் சவால்களை, வாய்ச் சவாடல்களை விடுத்து விவாத்திற்குஅழைப்பதற்கு முன்பு வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.
பாலாறு காப்பாற்றப்படும்:
இந் நிலையில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜெயலலிதா பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில்,
வேலூர் முதல் காஞ்சிபுரம் வரையிலான பாலாற்றுப் படுகை மாவட்டங்களின் குடிநீர்ஆதாரமாகவும், விவசாய ஆதாராமாகவும் பாலாறு விளங்குகிறது. இந்த நீரைநம்பித்தான் விவசாயிகளும், பொதுமக்களும் உள்ளனர்.
இந்த ஆற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசு முயற்சிக்கிறது. அதன் மூலம் 2டிஎம்சி நீரை தடுத்து நிறுத்தி சேமிக்க திட்டமிட்டுள்ளது. இதை எதிர்த்து தமிழகஅரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்தப்பிரச்சினையில தமிழக அரசு உடனடியாக செயல்பட்டு நடவடிக்கையில்இறங்கியுள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பாலாற்றுப் பிரச்சினைக்கு முக்கியத்துவம்கொடுக்கப்படும். ஆந்திர அரசின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தி அணை கட்டுவதுதடுக்கப்படும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை நான் எடுப்பேன்.
நான் அளித்துள்ள உறுதிமொழியின்படி ரேஷன் கடைகளில் 20 கிலோ அரிசிவாங்கினால் அதில் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். விவசாயிகளின்கூட்டுறவுக் கடன், வட்டி முதலானவை தள்ளுபடி செய்யப்படும் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications