பிய்த்துப் போட்ட பரோட்டா, திருப்பிப் போட்ட தோசை: காளிமுத்து வசனம்
மதுரை:
தமிழக மக்களின் மன நிலை திருப்பிப் போட்ட தோசை போல தெளிவாக இருக்கும்.பிய்த்துப் போட்ட பரோட்டா போல இருக்காது என்று அதிமுக அவைத் தலைவர்காளிமுத்து கூறியுள்ளார்.
உடல் நல பாதிப்பிலிருந்து மீண்டு, கடைசி நேரத்தில் பிரசாரம் செய்வதற்காக மதுரைவந்த காளிமுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பே இல்லை. தமிழக மக்கள் அதைஒருபோதும் விரும்ப மாட்டார்கள். அவர்களது மனநிலை திருப்பிப் போட்ட தோசைபோல தெளிவாக, ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். பிய்த்துப் போட்ட பரோட்டாபோல இருக்காது.
திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரன் அவ்வப்போது கருணாநிதியின் நாவில் குடிபுகுவார்.அதுதான் இப்போதும் நடந்துள்ளது. எந்த சாதியினரையும் இழிவான முறையில் கூறக்கூடாது. அப்படிக் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.
சாதி மோதல்கள் கூடாது என்று பேசியிருக்கலாம். அல்லது எதையும் பேசாமலேயேஇருந்திருக்கலாம். தூண்டுவது சுலபம், கட்டுப்படுத்துவது கடினம்.
எங்களது முழு மோதலும் திமுகவுடன்தான். மற்ற சக்திகள் குறித்து நாங்கள்கவலைப்படவில்லை. பொருட்டாக நினைக்கவில்லை. திமுகவுடன் நடக்கும் இறுதிப்போர் இது.
வைகோவின் பிரசாரம் பிரமாதமாக உள்ளது. நான் செய்திருந்தால் கூட இவ்வளவுநன்றாக இருந்திருக்காது. மிகக் கடுமையாக வைகோ பிரசாரம் செய்து வருகிறார்.அவருக்கு எனது பாராட்டுக்கள் என்றார் காளிமுத்து.












Click it and Unblock the Notifications