கம்ப்யூட்டர்-இன்டர்நெட் தருமா திமுக?: சரத்
கரூர்:
ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தத்தான் கலர் டிவி என்று கூறும் திமுக,கம்ப்யூட்டரும், கூடவே இலவச இன்டர்நெட் இணைப்பும் கொடுத்தால் ஏழைமக்களின் குழந்தைகளின் கல்விக்கு மிகவும் உபயோகமாக இருக்குமே என்று நடிகர்சரத்குமார் கேட்டுள்ளார்.
கரூரில் செய்தியாளர்களிடம் குமார் பேசுகையில், 2,000 ரூபாய்க்கு கலர் டிவி வாங்கமுடியும் என்று கருணாநிதி கூறுகிறார். நிச்சயம் ஒரு பிளாக் அன்ட் ஒயிட் டிவியைக்கூட இங்கு அந்த விலைக்கு வாங்க முடியாது.அப்படியே வாங்க வேண்டும் என்றால் சீனாவுக்குத்தான் போக வேண்டும். சீனதயாரிப்புகளில் ரிப்பேர் வந்து விட்டால் உதிரி பாகங்கள் இங்கு கிடைக்காது.அப்படியே தூக்கிப் போட வேண்டியதுதான்.
வாழ்க்கைத் தரத்தை உயர்த்த டிவி என்றால் அதற்குப் பதில் கம்ப்யூட்டரும், கூடவேஇலவச இன்டர்நெட் இணைப்பும் தரலாமே. அப்படிச் செய்தால் ஏழை மக்களின்குடும்பம் மிகுந்த பலன்களைப் பெறுமே.
திமுகவில் இப்போது புகைச்சல் வலுத்து வருகிறது. விரைவில் அது வெளிச்சத்துக்குவரும்.
டாடாவை மிரட்டியுள்ளனர். அது சாதாரண விஷயம் கிடையாது. இதை சொன்னால்கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போடுகிறார்கள். அவர்கள் எப்போதுமேகோடி கோடியாகத்தான் பேசுகிறார்கள்.
கோடிகளைப் பற்றி மட்டுமே அவர்களுக்கு எப்போதும் சிந்தனை. கோடியைத்தான்அவர்கள் பார்க்கிறார்கள். ஏழைகளைத் தெரியாது என்றார் சரத்குமார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு தனது எம்பி பதவியை ராஜினாமா செய்து கடிதம்அனுப்பிய சரத்குமார், அதை முறைப்படி மாநிலங்களவை சபாநாயகருக்குஅனுப்பாமல் இன்னும் எம்பி பதவியில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications