யாருக்கு வெற்றி? ஜோதிடர்கள் கருத்து!
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சி ஜெயிக்கும், யார் அடுத்த முதல்வர் என்பதுகுறித்து பல்வேறு ஜோதிடர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முதலில் குருவாயூர் சூரியன் நம்பூதிரி என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்.மே 15ம் தேதிக்குள் திமுக தலைமையிலான அரசு பதவியேற்கும். தற்போதையசூழ்நிலைகளின்படி, திமுக ஆட்சிக்கு வந்தாலும் அந்த ஆட்சியில் 2 முதல்வர்கள்பதவி ஏற்பார்கள். மே 8ம் தேதி கிரக சூழ்நிலைகள் ஜெயலலிதாவுக்கு சாதகமாகஇருந்தாலும் மற்ற கோள்களின் ஆதிக்கம் அவருக்கு இல்லை என்பதால் அவரால்ஆட்சியை தக்க வைக்க முடியாது.
பச்சை ராஜன்:
அடுத்து பச்சை ராஜன். கருணாநிதி தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கருணாநிதியின் ராசிரிஷபம். சனி இப்போது கடும் பலத்துடன் உக்கிரத்தில் உள்ளது. எனவேதான் எந்தத் தடையாக இருந்தாலும் அதை கருணாநிதி எளிதாக தகர்த்தெறிந்துவிடுவார்.
கருணாநிதிக்கு ஈசியில்லை..
வி.ஆர்.சுந்தரராமன் என்பவர் கூறுகையில், சனி தசை நடக்கும்போது அவர்களுக்கு எதைச் செய்தாலும் உச்சத்திற்குப் போவார்கள். தொடர்பான செய்திகள்புஅண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா ஆகியோர் முதல்வராக பதவியேற்றபோது அவர்களுக்கு சனி தசை உச்சத்தில் இருந்தது.
இப்போது விஜயகாந்த், வைகோ ஆகியோருக்கு சனி தசை உச்சத்தில் இருக்கிறது. அதேதேபால கருணாநிதிக்கும் உச்சத்தில் உள்ளது. அதேசமயம்அவருக்கு கேது தசாவும் நடக்கிறது. எனவே ஆட்சியைப் பிடிப்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது.
ஜெயலலிதாவுக்கு இப்போது ராகு தசை நடக்கிறது. கடுமையாக போராடினால் வெற்றியைப் பெறக் கூடிய வாய்ப்புகள் அவருக்கு உள்ளன.
ஜெ ஜெயிப்பார்.. ஜோதிடர் சங்கம் கணிப்பு:
சென்னை ஜோதிடர் சங்கத்தைச் சேர்ந்த 20 ஜோதிடர்கள் சேர்ந்து கணித்துள்ள கணிப்பு:
கருணாநிதிக்கு கேது தசையும், புதன் புத்தியும் உள்ளது. இது நல்லதல்ல. ஜெயலிலதாவுக்கு ஏழரை நாட்டுச் சனி இப்போது நடப்பில் உள்ளது. இதன் ஆரம்பத்தில்சில நிஷ்டங்களை அவர் சந்தித்திருப்பார். ஆனால் பின்னர் நல்ல பலன்களை அடைவார்.
தற்போது ஏழரை சனியின் பிற்பகுதியில் ஜெயலலிதா இருப்பதால், அவருக்கு இந்தத் தேர்தலில் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.
ஆரூட ஐயங்கார்:
ஆரூட ஐயங்கார் என்பவர் கூறுகையில், கருணாநிதி, ஜெயலலிதா ஜாதகங்களை ஆராய்ந்து பார்க்கையில், ஜெயலலிதாவுக்கு ராகு தசை, சுக்கிர புத்தி, சுக்கிரஅந்தாரம் ஆகியவை உள்ளன. மேலும், தேர்தல் நாளன்று கிரக நிலைகள் அனைத்தும் நல்ல நிலையில் இருப்பதால் ஜெயலலிதா வெற்றி பெறவாய்ப்புள்ளது.
கருணாநிதியைப் பொறுத்தவரை அவருக்கு இப்போது கேது தசை, புத்த புத்தி, சுக்கிர அந்தாரம் உள்ளது. தேர்தல் நாளன்று கிரக நிலைகள் இவருக்குசாதகமாக இல்லை. அதேசமயம், ஜெயலலிதாவை விட மோசமான நிலையிலும் இவர் இல்லை. இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அதுமிகக் கடுமையான போராட்டத்துக்குப் பின்னர் கிடைத்த வெற்றியாகவே இருக்கும் என்பதை திட்டவட்டமாக கூற முடியும் என்கிறார் ஆரூட ஐயங்கார்.












Click it and Unblock the Notifications