சிவனாண்டிக்கு தேர்தல் ஆணையம் ஆப்பு!
சென்னை:
அதிமுகவுக்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டு வந்த உளவுத்துறை டிஐஜிசிவனாண்டியை அப்பொறுப்பிலிருந்து மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
![]() |
எதிர்க்கட்சிகளை உடைத்து அங்கிருந்து பலரை அதிமுகவுக்கு ஏற்றுமதி செய்ததில்முக்கியப் பங்கு வகித்தவர் சிவனாண்டி.
முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த இவர் சசிகலாவின் ஆதரவோடு ஐபிஎஸ்அந்தஸ்தைப் பெற்றார்.
கிட்டத்தட்ட அதிமுக மாவட்டச் செயலாளராகவே மாறி கட்சிப் பணிகளில் தீவிரமாகஈடுபட்டு வந்தார். தனது வீட்டையே அதிமுக தலைமை அலுவத்துக்கு முன் மாற்றிக்கொண்டு வந்தார்.
அத்தோடு இல்லாமல் பல்வேறு கட்சிகளில் குழப்பத்தை ஏற்படுத்தியும், பொதுமக்கள்மத்தியில் அதிமுகவுக்கு சாதகமான கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதிலும்சிவனாண்டி முக்கிய காரணமாக இருந்தார்.
![]() |
| அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் சிவனாண்டி (இடதுபுறம்) கூடவே உளவுப் பிரிவினர் |
மேலும், மதல்வர் ஜெயலலிதாவின் பிரசார பயணத்தில் சிவனாண்டியும்ஈடுபட்டிருந்தார். கூட்டம் அதிகம் இல்லாத இடங்களில் ஆட்களைத் திரட்டி வந்துநிற்க வைப்பதிலும், அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டும் வந்த சிவனாண்டி மீதுதேர்தல் ஆணையத்தில் புகார்கள் குவிந்தன.
அதிமுகவுக்கு அவர் வாக்கு சேகரிப்பது போல புகைப்படம் வெளியாகி பரபரப்பைஏற்படுத்தியது.
இந்தப் புகார்களை தீவிரமாக பரிசீலித்த தேர்தல் ஆணையம் தற்போது சிவனாண்டியைஅப்பொறுப்பிலிருந்து மாற்றி உத்தரவிட்டுள்ளது.
சிவனாண்டி காவல்துறை தலைமையக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுப்பிரிவு டிஐஜயாக, உளவுத்துறை ஐ.ஜி. சஞ்சீவ் குமார் கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
தேர்தல் ஆணைய பரிந்துரையின் பேரில் தமிழக உள்துறைச் செயலாளர் பவன்ரெய்னா இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
![]() |
| சென்னை அதிமுக தலைமையகத்தின் எதிரே சிவனாண்டி குடியேறிய அபார்ட்மெண்ட் |
பணி மூப்பும் ரத்து:
அதே போல சீனியர்களை எல்லாம் மீறி சசிகலாவுக்கு வேண்டியவர் என்ற ஒரேகாரணத்தால் ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டவர் சிவனாண்டி.
இவரை விட பணியில் மூத்தவர்களான அதிகாரிகள் தொடர்ந்த வழக்கில்,சிவனாண்டியின் பணி மூப்பை ரத்து செய்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம்வழங்கியுள்ளது.
இதனால் சிவனாண்டிக்கு ஒரே நாளில் டபுள் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.





Click it and Unblock the Notifications
