லாரி-வேன் மோதல்: ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஆற்காடு:
ஆற்காடு அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்த்ை சேர்ந்த நான்கு பேர்பரிதாபமாக இறந்தனர்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் சத்ய நாராயணா. அரிசிவியாபாயான இவர் தனது உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காகசென்னைக்கு குடும்பத்துடன் வேன் மூலம் கிளம்பினார்.வேன் இன்று அதிகாலை ஆற்காடு அருகே வந்தபோது வேப்பூர் என்ற இடத்தில்எதிரே சென்னையிலிருந்து குடியாத்தம் நோக்கி வந்த இரும்புக் கம்பிகளை ஏற்றியலாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
இதில் சத்ய நாராயணா, 10வயது சிறுவன் சந்தோஷ், 25 வயதாகும் பானுப்ரியாமற்றும் வேன் டிரைவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பத்மாவதி, புவனேஸ்வரி, மாலதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அனைவரும்வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications