கருணாநிதி கைதை சன் டிவியில் காட்ட தடை
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவம்உள்ளிட்டவற்றை சன் டிவியில் ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
சன் டிவியின் செய்தி அறிக்கையின் இடை இடையே மறக்க முடியாத சம்பவங்கள்என்ற தலைப்பில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த முக்கிய சம்பவங்கள் என்றுசிலவற்றை ஒளிபரப்பி வந்தனர்.அதில், கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டது, கடற்கரை காமராஜர்சாலையில் நடந்த திமுக பேரணியில் ரவுடிகள் புகுந்து கொடூரத் தாக்குதல் நடத்தியது,ராணி மேரிக் கல்லூரி மாணவிகளை போலீஸ் தாக்குவது, அரசு ஊழியர்களைபெட்ரூம் வரை புகுந்து இழுத்துச் செல்வது,
சாலைப் பணியாளர்கள் தற்கொலை உள்ளிட்டவை சோக கீதத்தின் பின்னணியில்காட்டப்பட்டன.
இது தொடர்பாக அதிமுக குழு ஒன்று தலைமைச் செயலகத்திற்குச் சென்று தலைமைத்தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் புகார் கொடுக்க முயன்றனர்.
ஆனால் அதற்குள் நரேஷ் குப்தா வீட்டுக்குச் சென்று விட்டதால் இணை ஆணையர்செந்தில் குமாரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
இந்தப் புகார் குறித்து நரேஷ் குப்தாவுக்குத் தெரிவிக்கப்பட்டது.
புகாரைப் பரிசீலித்த நரேஷ் குப்தா, சன் டிவி நிகழ்ச்சிக்குத் தடை விதித்துஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications