தேர்தலை புறக்கணித்த கிராமம், தலித் காலனி
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட மாகாணியம் கிராமத்தைச் சேர்ந்த வாக்காளர்கள்தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டதால் அங்கு ஒரு ஓட்ட கூட இன்னும்பதிவாகவில்லை.
மாகாணியம் கிராமத்தில் மொத்தம் 1,063 வாக்குகள் உள்ளன. இதில் ஆண்கள் 528பேர், பெண்கள் 535 பேர். இவர்களுக்காக அங்குள்ள பள்ளி ஒன்றில் வாக்குச் சாவடிஅமைக்கப்பட்டுள்ளது.காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியபோது யாரும்ஓட்டுப் போடவரவில்லை. கிராமத்தில் அடிப்படை வசதிகள், சாலை வசதி உள்ளிட்டவை செய்துதராத காரணத்தால் தேர்தல் புறக்கணிப்பில் கிராமத்தினர் ஈடுபட்டதால் யாரும் ஓட்டுப்போடப் போகவில்லை.
இதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் கிராம மக்களுடன் பேசி சமாதானத்தில்ஈடுபட்டனர். இருப்பினும் ஒருவரும் ஓட்டுப் போட ன்வரவில்லை. அரசியல்கட்சியினரும் கிராம மக்களிடம் பேசி வருகின்றனர்.
அதே போல விருத்தாலசத்தில் முகசபரூர் தலித் காலனியைச் சேர்ந்த 732 பேர்தேர்தலைப் புறக்கணித்தனர். சில நாட்களுக்கு முன் இப் பகுதியில் சப்ளைசெய்யப்பட்ட குடிநீர் அசுத்தம் கலந்து வந்ததால் அதைக் குடித்த மக்கள் உடல் நலம்பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குடிநீர் தருவதில் காட்டப்பட்ட அலட்சியத்தைக் கண்டித்து அவர்கள் தேர்தலைபுறக்கணித்துளளனர்.












Click it and Unblock the Notifications