ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துங்கள்: வாசன்
சென்னை :
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில், நல்லாட்சி ஏற்பட தமிழகத்தில் ஆட்சிமாற்றத்தை வாக்காளர்கள் ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர்ஜி.கே.வாசன் கூறியள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சொன்னதையும் செய்வேன்.சொல்லாததையும் செய்வேன் என்று கூறுகிறார் ஜெயலலிதா. 2001ம் ஆண்டு நடந்தசட்டசபைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், கூறிய எதையும் நிறைவேற்றாமல்,ஆட்சி செய்து முடித்துள்ளதை யாரும் மறந்து விட முடியாது.தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவேன் என்று கூறினார் ஜெயலலிதா. ஆனால்சொன்னபடி செய்தாரா? அரசு வேலை வாய்ப்பையே படித்த இளைஞர்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவு செய்தவர் ஜெயலலிதா.
வேலை கேட்டு கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ளவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 50 ஆயிரத்து 5 ஆகும். இதுதவிரஏற்கனவே பதிவு செய்து வைத்து வேலைக்கு காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 49லட்சத்து 23 ஆயிரத்து 296 ஆகும்.
இவர்களுக்கெல்லாம் ஜெயலலிதாவின் பதில் என்ன?
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் அறிக்கைகளுக்கு மக்கள் மத்தியில்நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் பொது மக்களிடையே செல்வாக்குஅதிகரிப்பதைக் கண்ட ஜெயலலிதா திமுக உள்ளிட்ட கட்சிகள் கூறியவாக்குறுதிகளையெல்லாம் அப்படியே காப்பி அடித்து கூற ஆரம்பித்தார்.
மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படக் கூடிய அரசை மக்கள் இந்தத் தேர்தலில்தேர்ந்தெடுக்க வேண்டும். கருணாநிதி தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டும்.வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிட முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் வாசன்.
திமுகவில் காந்திராஜன்:
இந் நிலையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன்திமுகவில் இணைந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் கடந்த 1991ம் ஆண்டு நடந்தசட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று துணை சபாநாயகராக நியமிக்கப்பட்டவர்காந்திராஜன்.
1996ல் அதிமுக ஆட்சி பதவியிலிருந்து இறங்கியவுடன் தீவிர அரசியலிலிருந்துகாந்திராஜன் ஒதுங்கியிருந்தார்.
இந் நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து அக் கட்சியில் இணைந்தார்.












Click it and Unblock the Notifications