மக்களை விட பணத்தையே நம்பிய திமுக-திருமா
கடலூர்:
மக்களை நம்பாமல் பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்தித்தது திமுக என்றுவிடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
ராமநத்தம் என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஜெயலிலதா தலைமையிலான அதிமுக கூட்டணி மக்களை மட்டுமே நம்பி தேர்தலைசந்தித்தது. ஆனால் திமுக தலைமையிலான கூட்டணி பணத்தை நம்பி தேர்தல்களத்தில் இறங்கியது.
வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கி விடலாம் என்று அவர்கள் கணக்குபோட்டார்கள். ஆனால் மக்கள் விழிப்புணர்வோடு இருந்ததால் அவர்களால் ஏமாற்றமுடியவில்லை.
பல்வேறு திட்டங்களை தொலைநோக்குப் பார்வையுடன் முதல்வர் ஜெயலலிதா தனதுஐந்து ஆண்டு கால ஆட்சியில் அமல்படுத்தினார். அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கும்பல்வேறு சிறப்பான திட்டங்களை அவர் அறிவித்துள்ளார்.
சொல்லிய திட்டங்களுடன் சொல்லாத பல அருமையான திட்டங்களையும் அவர்அமல்படுத்தியுள்ளார்.
எதை எல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து சாதனை படைத்துள்ளார்.ஆனால் சொன்ன எதையும் செய்யாதவர் கருணாநிதி. வெறும் தேர்தல் வெற்றியைமட்டுமே மனதில் கொண்டு திட்டங்களை அறிவிப்பவர் கருணாநிதி என்றார்திருமாவளவன்.












Click it and Unblock the Notifications