நடுக்கடலில் பலியான அகதிகள் எண்ணிக்கை 10 ஆனது
மண்டபம்:
இலங்கையிலிருந்து இன்று காலை 69 தமிழர்கள் அகதிகளாக வந்துள்ளனர். நடுக்கடலில்உள்ள தீவில் மேலும் 13 அகதிகள் தத்தளித்து வருவதாகவும் தகவல் கிடைத்துஅங்கு கடற்படை வீரர்கள் விரைந்துள்ளனர்.
இலங்கையிலிருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த சில நாட்களாக நூற்றுக்கணக்கான அகதிகள் இலங்கையிலிருந்துவந்துள்ளனர்.நேற்று படகில் வந்த 10 அகதிகள் நடுக் கடலில் படகு கவிழ்ந்ததில் பரிதாபமாகஉயிரிழந்தனர். அவர்களில் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. முன்னதாக 5 பேர்பலியானதாக தகவல் வந்தது. ஆனால், 10 பேர் பலியாகிவிட்டனர்.
இந் நிலையில் இன்று காலை 69 தமிழர்கள் அகதிகளாக வந்தனர். இவர்கள்அனைவரும் அரிச்சமுனை பகுதிக்கு வந்து இறங்கினர். அவர்களை விசாரித்த பின்னர்மண்டபம் முகாமுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, படகு மூலம் வந்த 13 அகதிகள் நடுக் கடலில் ஒரு தீவில் இறக்கிவிடப்பட்டனர். அவர்களை அழைத்து வந்த படகோட்டிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனால் 13 பேரும் பரிதவித்து வருகின்றனர். இந்தத் தகவல் கிடைத்ததும்,இந்திய கடலோரக் காவல் படையினர் மற்றும் கடற்படை வீரர்கள் அங்குவிரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications